270 ||-
அப்பாத்துரையம் - 10
இத்தகைய தொலைக் கோடி உலகச்செல்வங்களை நாடி அடையும் வகை துறைகள் வகுத்தல் நலம்.
இந்திய அரசாங்கமோ, அதனை ஊக்கிச் செயலாற்ற வைக்கும் முறையில் சென்னை அரசாங்கமோ, இவ்வகைகளில் முயன்றால், இவற்றைப் பற்றிக் கூறவல்ல அறிஞர் இன்று இந்தியாவின் சார்பில் வெளி நாடுகளில் பிரதிநிதித்துவம் வகிக்கும் அறிவுச் செல்வரிடையிலேயே கூட உண்டு. ஸர். ஏ. ராமசாமி முதலியார், டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், ஸர்.ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஆகியவர்கள் தமிழர் பிரதிநிதிகளாய் செல்லக்கூடுமானால், அவர்களே இவற்றைத் திறம்பட எடுத்துரைக்கத் தக்கவர்களாவர் என்பதைத் தமிழர் யாவரும் அறிவர்.
ஐ.நா. அமைப்பின் வெற்றி தோல்விக்கு டம் செய்யும் இன்னொரு பண்பு அதன் உயர்தளமட்டமே (high level rank) ஆகும். அமைப்பின் பிரசாரம் எத்தகைய அறிஞரால் செய்யப்பட் டாலும், எத்தகைய உயர் அரசியல் அனுபவமுள்ளவரால் செய்யப்பட்டாலும், உலக மூலைமுடுக்குகளையும், உலகப்பொது மக்களின் தாழ்புறஞ் சேரிகளையும் சென்றெட்ட முடியாது.பல திறப்பட்ட உயர்வு தாழ்வு நிலையுடைய வகுப்பினரிடையே அவ்வம்மட்டத்தில் நின்று மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பொதுமக்கள் தலைவர்களாகிய அதனதன் பிரதிநிதிகளே அதனதன் சார்பில் பேசவும் விளக்கந்தரவும் தக்கவர்கள். ஆகவே, வகுப்படிப்படையான சங்க அமைப்புகள் எங்கும் ஏற்படுவதுடன் கூடுமான இடத்திலெல்லாம் செல்வாக்கற்ற தனி மனிதர் குரலும், உச்ச இடத்தில் சென்றெட்டும்படியான வகை துறைகள் செய்யப்பட வேண்டும். இவற்றைச் செய்வதில் சிக்கல்கள் இருக்கலாம். அவை வரம்பற்ற அளவு வேலையைப் பெருக்கலாம். ஆனால், அவற்றின் பயன் அனுபவத்தில் மிகமிகப் பெரிதாக இருக்கும். தனிமனிதன் உரிமையை அவை தட்டி எழுப்பும். வாயில்லா ‘மார்க்ஸ்'களுக்கும் ஆதரவற்ற ‘ஸாக்ரட்டீஸ்’ களுக்கும் அது வாயும் ஆதரவும் தரும்.
ஐ.நா. அமைப்பின் வெற்றி உலகின் வெற்றிமட்டுமன்று; அரசாங்கங்கள், அறிஞர், மக்கள் தலைவர் வெற்றி