பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 10

(278) ||- இயற்கையில் நில இணைப்பாகக் கிடந்த இதனை வெட்டியே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சூயஸ் கடலிணைப்புத் திட்டத்தை மனித உலகம் நிறைவேற்றியது.

புதிய உலகில் அமெரிக்கா தென் வடலாகக் கிடக்கிறது. இதன் இரு பெரும் பகுதிகள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று அழைக்கப்படுகின்றன. கிட்டத்தட்டத் தனித் தனிக் கண்டங் கள்போல அவை பிரிந்தே கிடக்கின்றன. ஆயினும் அவை முற்றிலும் துண்டுபட்டு விடவில்லை நீண்டொடுக்கிய ஒரு நில இடுக்கு அவற்றை இணைக்கிறது.இந்நில இடுக்கே பனாமா நில இணைப்பு (Isthmus of Panama

இயற்கையில் நில இணைப்பாகக் கிடந்த இதனை வெட்டியே மனித இனம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பனாமாக் கடலிணைப்புத் திட்டமாக நிறைவேற்றியுள்ளது.

நிலவுலகப் படத்தை நன்கு கவனித்து, அதன் கடல் நிலக் கிடைப்பையும், இயல்பையும் நன்கு உணர்ந்தால், இந்த இரு திட்டங்களின் இன்றியமையாமையும் பெரும் பயனும் உயிர் முக்கியத்துவமும் இனிது விளங்கும்

நிலவுலகின் வடகோடியும் தென்கோடியும் துருவப் பகுதிகள். அவை மனித இன, உயிரின வாழ்வுக்கு இடந்தராத பனிப்பாழ் வெளிகள். அங்குள்ள கடல்களின் பரப்பு முழுவதும் ஆண்டின் பெரும் பகுதியிலும் பனிப்பாறை மூடியிருப்பவை. மீந்த நாள்களிலும் பனி அரை குறையாகவே உருகிப் பரப்பில் பனி மலைகளும் பனிப் பாளங்களும் மிதந்து திரியும் பனிப் புயலும், சூறாவளிகளும் அவற்றை எங்கும் கொண்டு சுழற்றும்.எதிர்ப்படும் எப்பொருளையும் அவை மோதி அமிழ்த்திவிடவோ, நொறுக்கிவிடவோ வல்லவை இதனால் உலகின் கடல் வழிகள் அப் பகுதிகளையோ, அதன் கடல்களையோ அணுகுவதில்லை.

கண்டங்களைப்போலவே உலகில் மாகடல்களும் ஐந்து உண்டு. அவற்றுள் வடமாகடலும் (arctic ocean) தென்மா கடலும்(antrati cocean) துருவப் பகுதிக்குரியவை. ஆகவே அவை மனித உலகின் கடல் வழிப் போக்குவரவுக் குரியவையாய் இயங்கவில்லை. உலகின் எல்லாக் கடல் வழிகளுமே மீந்த மூன்று மாகடல்களில் தான் சென்றாக வேண்டும். ஆனால் பசிபிக்