இரு கடற்கால்கள்
279
மாகடல், அட்லாண்டிக் மாகடல், இந்து மாகடல் ஆகிய வாழுலகக் கடல்கள் மூன்றும் தென்கோடியில்தான் ஒன்றுடன் ஒன்று ஒரு சிறிதேனும் இணைகின்றன
ஆசியா ஐரோப்பா ஆபிரிக்காப் பரப்புக்கள் இந்நிலையில் கடல் வழி செல்பவருக்கு உலகை இருவேறு பாதிகளாகப் பிரித்து விடுகின்றன. ஏனெனில் அவற்றின் வடபகுதியான ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றின் வடகரை வடதுருவப் பகுதிக்கு உள்ளே சென்று வட மாகடலின் தென் கரைகளாய்க் கிடக்கின்றன. ஆபிரிக்காவின் தென்கோடியோ தென்மாகடலின் பனிப்பகுதியிலிருந்து ஒரு சிறிதே விலகிக் கிடக்கின்றது.
ஆசியா -ஐரோப்பாப் பரப்பில், ஆசியாவை ஆபிரிக்கா வுடன் இணைக்கும் சூயஸ் நில இடுக்கை வெட்டிச் சூயஸ் கடலிணைப்புத் திட்டம் நிறைவேற்றியதன் மூலம் இவ்விரு பாதி உலகங்களும் ஓரூலகமாக ஒன்றுபட இடமேற்படுகிறது. சூயஸ் திட்டத்தின் இன்றியமையாப் பயனும் உயிர் முகியத்துவமும் இதுவே.சூயஸ் கடலிணைப்பு ஏற்படவில்லை யென்றால் அட்லாண்டிக் மாகடலிலிருந்தும் அதன் மேற்கிலுள்ள உலகப் பாதியிலிருந்தும் இந்துமாகடலுக்கும், அதன் கிழக்கிலுள் உலகப் பாதிக்கும் போக்குவரவு நடத்த ஒரே வழிதான் உண்டு. கப்பல்கள் ஆப்பிரிக்காக் கரை முழுவதும் சுற்றியாக வேண்டும். இந்நெடுஞ் சுற்று வழியை விட,சூயஸ் திட்டத்தால் ஏற்படும் புதுவழி பல்லாயிரக்கணக்கான கல் தொலைவையும், பல நாட் பயணத்தையும், அதற்காகும் பெரும் பணச் செலவையும், தொல்லைகளையும் குறைத்து விடுகிறது.இது போலவே அமெரிக்காவின் தென் வடலான நெடும் பரப்பும் கடல் வழி செல்பவருக்கு உலகை இருவேறு பாதிகளாகப் பிரித்து விடுகிறது. ஏனெனில் வடஅமெரிக்காவின் வடகரை வடதுருவப் பகுதிக்குள் சென்று வடமாகடலின் தென்கரையாய்க் கிடக்கிறது. தென் அமொக்காவின் தென்கோடியும் தென்துருவத்தினுட் சென்று தென்மாகடலின் வடபகுதியாய் அமைகிறது. தென்கோடி யிலுள்ள ஒரு சிறு கடற்கால் தான் அருமுயற்சியுடன் அது கடந்து கப்பல்கள் செல்ல வழிவிடுகிறது.
வடதென் அமெரிக்காக்களை இணைக்கும் பனாமா நில டுக்கை வெட்டிக் கடலிணைப்பாக்கியதன் மூலம் இவ்விரு பாதி