288
அப்பாத்துரையம் – 10
அவ்வாணிகத்துக்குரிய உயிர் வழியேயாகும். இக்காரணத்தாலேயே சூயஸ், எகிப்து ஆகியவற்றை மட்டுமன்றி, அவ் உயிர்வழியின் ஒவ்வோ ரங்குலத்திலும்தாமே இடம்பெற மேலை வல்லரசுகள் யாவும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் முயன்று, பல படியான வெற்றி தேர்லிவகள் கண்டுள்ளன.
பிரிட்டன் இவ்வகையிலேயே ஜிப்ரால்டர், மால்ட்டா, சைப்ரஸ், பிரிட்டிஷ் சோமாலிலாந்து, ஏடன் ஆகியவற்றைக் கைப்பற்றி ஆண்டு வந்துள்ளது. வட ஆபிரிக்காக் கரையெங்கும் ஐரோப்பாவின் வேட்டைக்களமாயிருப்பதும், மொராக்கோ, அல்ஜீரியா, டுனிஸியா ஆகியவை உலகப் போர்க் களங்களாகவோ, அரயில் கொந்தளிப்பு மையங்களாகவோ அமைந்துள்ளதும் இதனாலேயே. மற்றும் இத்தாலி சோமாலிலாந்தில் இடம் பெற்றுக் கொண்டதும், இரண்டு ஆண்டுகள் போர்செய்து அபீசீனியாவைக் கைப்பற்றி ஆளமுயன்றதும் இதே அடிப்படை நோக்கத் துடன்தான் சூயஸ் செயலாட்சிக் கழகத்திலும் படிப்படியாகச் சலுகை பெற்று உயிர்ப்பங்கு பெற முஸ்ஸோலினி கால இத்தாலி பெருமுயற்சி செய்து வந்தது.
தமிழக வாணிகத் தொடர்பு பற்றிய அவா சூயஸ் திட்டத்தையும் அதன் மூலமாக உலகையும் ஆட்டிப் படைத்தது போலவே, பனாமா திட்டக் கனவையும், திட்டத்தையும் தூண்டும் பின்னணியாக நிலவி வந்துள்ளது.
இந்தியாவுக்குப் புதுவழி காண மேலையுலகம் முயன்ற சமயமே, உலகம் உருண்டை என்ற கருத்து உலகில் பரவி வந்த சமயமாகும். ஆகவே கடல்வழியாக நேரே மேற்கே சென்றால், உலகம் சுற்றியாவது இந்தியாவின் கீழ்க்கரை அடைந்துவிடலாம் என்று அன்று மேலையுலகினர் எண்ணினர். நன்னம்பிக்கை முனை வழி புதிதாகக் காணப்பட்ட அதே வேளையிலே, கொலம்பஸ் என்ற கடலோடி இவ்வழி தேடிச் சென்றார். அவர் இந்தியாவை அடையவில்லை ஆனால் புதிய உலகப் பகுதியாகிய அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் பெரும் பேறும் புகழும் அவருக்கு உரியதாயின.
இந்தியாவுக்கு மேல்திசைவழி காண எண்ணி உலகம் சுற்றி பின்னாட்களில் ஆஸ்திரேலியாவையும்
யவர்களே