(296
அப்பாத்துரையம் – 10
இந்த அச்சம் எவ்வாறு ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஆனால் எவ்வாறு ஏற்பட்டாலும் கடற்கால் திட்டத்தை இரண்டாயிர ஆண்டு ஒத்திப் போடச்செய்த அச்சமாக அது அமைந்தது.கிட்டத்தட்ட நம் நாகரிகக் காலத்திலேயே,கி.பி.19ஆம் நூற்றாண்டு வரை, இது எளிதில் நீக்க முடியாத நீடித்த நம்பிக்கையாய் இருந்து வந்தது.
ஆராயாக் குருட்டு நம்பிக்கைகள் நாகரிக ஊழிகளில் கூட எவ்வளவு விடாப்பிடியாய், அறிஞர் அறிவைக்கூட மறைக்குமளவு, வேரூன்றி விடக்கூடும் என்பதை இது காட்டுகிறது.
கிறிஸ்தவ ஊழி தொடங்குவதற்கு முன்னே நடுவுலக அரங்கம் முழுவதிலும் மீண்டும் பெருமாறுதல் ஏற்பட்டது. கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரை உரோமப்பேரரசு விரிவுற்று ஐரோப்பாவின் தென்பகுதி,ஆசியாவின்மேல்பகுதி,ஆபிரிக்காவின் வடபகுதி ஆகிய பெரும் பரப்பு முழுவதையும் தன் கொடிக்கீழ்க் கொண்டு வந்தது. எகிப்து அப்பண்டை உலகப் பேரரசின்ஒரு மாகாணமாய் விட்டது.
உரோமப் பேரரசனான திராஜன் கி.பி. 98இல் கால்வாயை விரிவுபடுத்தினான். கால்வாய் தொடங்குமிடத்தை அவன் பூபாஸ்டிஸ் ஆற்றிலிருந்து பாபிலோன் என்று அழைக்கப்பட்ட கெய்ரோ வரை கொண்டு சென்றான். விரிவுபடுத்தப்பட்ட இக்கால்வாயை நாம் இரண்டாம் நீலாற்றுக் கால்வாய் என்னலாம். அந்நாளில் அது திராஜன்கால் என்றும் ஆக்ஸ்டஸ் கால் என்றும் வழங்கிற்று.
எச்.ஆர்.ஹால் போன்ற சில தற்கால வரலாற்றாசிரியர் இந்த இரண்டாம் கால்வாய் உரோமப் பேரரசர் காலத்துக்கேயுரிய தன்று என்றும், பின்னாளைய அராபிய ஆட்சியாளர் 'அம்ரு' வுக்கே உரியதென்றும் கூறுகின்றனர். இது எவ்வாறானாலும், கி.பி.3ஆம் நூற்றாண்டில் உரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் காலத்துக்குள் அது மீண்டும் பாழடைந்து விட்டது.
உரோமப் பேரரசு வீழ்ச்சியுற்றும இரண்டு நூற்றாண்டுகளுக் குள்ளாக,கி.பி.7ஆம் நூற்றாண்டில் எகிப்து அராபியர் ஆட்சிக்குட் பட்டது.அராபிய ஆட்சியில் எகிப்துத் தலைவராயிருந்த 'அம்ரு'