பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 10

302) ||- துறைமுகங்களுடன் வாணிகஞ் செய்யும் உரிமை பெற்றார். அதைச் செயல்படுத்தக் கூட்டுக் கழகம் ஒன்றும் அமைத்தார். பிரிட்டிஷாரும் இதற்கீடாக, எகிப்தியத் துறைமுகங்களில் உரிமைபெற்று 'லெவாண்ட் கழகம்' என்ற நிறுவனம் ஒன்று அமைத்தனர். அதனுடன் பிரிட்டிஷ் கடலோடிகள் உரிமை யுடனும், உரிமை மீறியும் எகிப்தியக் கடல்களில் ஊடாடினர்.

எகிப்து மூலம் பிரான்சு கீழ்த்திசை வாணிகமும் ஆட்சியும் பரப்ப முயன்று வந்தது என்பதைப் பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் தம் அரசியலுக்கு அடிக்கடி தெரிவித்து எச்சரிக்கை செய்துவந்தனர். ஆனால் பிரிட்டன் நடுநிலக் கடலில் பிரான்சுக்குச் சரிசமமாக உரிமை பெறுவதில் மட்டுமே நாட்டங் கொண்டிருந்தது. எகிப்தில் பிரான்சு காலூன்றி விடாமலும் ஒருகண் ஓடவிட்டு வந்தது. எனினும் சூயஸ் வழிபற்றி அது எத்தகைய கனவுகளும் காண வில்லை, எத்தகைய அச்சமும் கொள்ளவில்லை.

நன்னம்பிக்கைமுனை வழியிலேயே தன்னம்பிக்கையுடன் மனநிறைவு கொண்டமைந்தது. இதற்கேற்ப, 1785 இல் 'ஜேம்ஸ் காப்பர்' என்ற ஆங்கிலேயர் ‘இந்தியாவுக்குரிய வழி' என்ற ஏட்டில் சூயஸ் வழியின் கேடுகளை எடுத்துக்காட்டி, நன்னம்பிக்கைமுனை வழியே சிறப்புடையதென்று வாதாடியிருந்தார். பிரிட்டிஷ் அரசியலார் கருத்துக்கோணத்தின் நிழற்படப் பதிவாக இது அமைந்தது.

பிரஞ்சுப் புரட்சியையடுத்து 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய நிகழ்ச்சிகள் பிரிட்டிஷ் அரசியலாரின் மேளாப்புக்கு ஒரு பேரதிர்ச்சி தந்தன. பதினான்காம் லூயிக்குப் பேரறிஞர் லைப்னிட்ஸ் தந்த அதே போதனையைப் பிரஞ்சு அரசியல்வாணர் தாலிராந்து பிரஞ்சு மாவீரப் படைத்தலைவன் நெப்போலியனுக்கும் வழங்கினான். எகிப்தில் பிரஞ்சுத் தூது மனைத் தலைவராயிருந்த சார்ல்ஸ் மக்கெல்லனும்,பிரஞ்சு ஆட்சியாளரும் இதற்கு ஆதரவுதந்து இசைவளித்தனர்.1798இல் நெப்போலியன் நடுஉலகில் தன் பிடி பரப்பி எகிப்துமீது படையெடுத்தான்.

எகிப்தைக் கைப்பற்றியதுடன் நெப்போலியன் நிற்கவில்லை. சூயஸ் கடல்வழி திறப்பதற்கான செயல்முறை