இரு கடற்கால்கள்
305
பின்னாட்களில் சூயஸ் திட்டத்தை நிறைவேற்றிப் பெரும் புகழ் பெற்றவர் 'பெர்டினாண்ட் டி லெஸப்ஸ்' தம் பணிக்கு வாக்ஹார்ன் வழிகாட்டியாயிருந்து செய்த சேவை எவ்வளவு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதை உலகுக்குத் தெரிவிக்கும் முறையில் அவர் கடற்காலின் வாயில் முகப்பிலேயே வாக்ஹார்ன் உருவச்சிலை ஒன்றை எழுப்பினார். அதன்கீழே பொறிக்கப்பட்ட கற்பொறிப்பில் 'எகிப்து வழியாக அஞ்சலிணைப்பு ஏற்படுத்த முடியும் என்று காட்டியதன் மூலம், இரு கடல்களை இணைக்கும் கடலோடி வாணிக வழிக்கு வழிகாட்டிய முதல்வர்' என்று வாக்ஹார்னை அவர் பாராட்டியுள்ளார்.
லெப்டினன்ட் வாக்ஹார்ன் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் லெட்டினன்ட் கர்னல் எப். ஆர். செய்னி, லினன்ட் பே ஆகியவர்கள். இரு கடல் மட்ட வேறுபாடு பற்றிய அச்சம் கடற்கால் திட்டத்துக்கு எவ்வளவு முட்டுக்கட்டை போட் டிருக்கிறது என்பதைச் செய்னி உணர்ந்தார். அதன் உண்மை கண்டறிய அவர் அளவை ஆராய்ச்சிகளில் முனைந்தார். ஆனால் இது முடிவான பயன் தரவில்லை. இரண்டாவது நண்பரான லினன்ட் பே 1841க்குள் கடற்காலுக்கான ஒரு திட்டத்திலேயே முனைந்தார். பெலூஸியத்திலிருந்து சூயஸ் வரை கடற்கால் வகுக்கும்திட்டத்தை அவர்வெளியிட்டார்பின்னாட்களில்கடற்கால்திட்டம் வகுத்தவர்களுக்கு இதுவே முன் மாதிரி அடிப் படையாய் அமைந்தது.
19ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலே சமயச் சார்பான கழகமாகிய தூய திரு சைமன் சங்கத்தினர் தம் உலகத் திட்டத்துடன் திட்டமாக சூயஸ் பனாமாக் கடற்கால் திட்டங்கள் பற்றியும் பிரசாரம் செய்து வந்தனர். அடிக்கடி சூயஸ் திட்டத்தைச் செயற் படுத்துவதில் அவர்கள் ஆர்வமுயற்சி மேற்கொண்டனர். சங்கத் தலைவர் 1825இல் இயற்கையெய்தி விட்ட பின்னும் சங்கம் மேலும் திட்டப் பிரசாரத்தில் தொடர்ந்தது. 1833இல் அவர்கள் செயல்
துறையில் இறங்கியபோதிலும் முயற்சி வெற்றி பெறவில்லை. ஆனால் 1846இல் அவர்கள் திட்ட வேலையை மேற்கொள்ள ஒரு சர்வதேசக் கூட்டுக் கழகம் அமைத்தனர். திட்ட நிதிக்காக 1,50,000 பொன் வரை பங்குகள் திரட்டினர்.