பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

309

அவர் தாயக தாயக அரசியல் அவரை ஒறுத்ததுண்டு, பழித்ததுண்டு. ஆதரவுதந்து பாராட்டி வாழ்த்தியதுமுண்டு. பிரிட்டனில் மக்களும் மாமன்னரும் அவருக்கு ஆதரவு காட்டியதுண்டு, அவரை மதித்ததுண்டு அதே சமயம் பிரிட்டனின் அரசியலார் அவரை ஓயாது மறைமுகமாக எதிர்த்து அவர் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை இட்டனர்.ஆனால்,

'மெய்த்திருவந் துற்றபோதும், வெந்துயர் வந்துற்றபோதும் ஒத்திருக்கும் உள்ளத்து.’

உரவோராக அவர் புகழ்வானில் என்றும் ஒளிவீசுகிறார்.

உலகுவாழ

வாழ்ந்தவர்

அவர். உலகு புகழினும் இகழினும்,

போற்றினும், புறக்கணிப்பினும்

அவ்வுலகு வாழவே வாழ்ந்த பெரியார்களுள் அவர் ஒருவர். மலர் பொலிவுற்று வாழ்வதற் காகவும், சிறுவர் சிறுமியர் விளை யாடுவதற்குரிய பொன்சிறகுகள் திர்ப்பதற்காகவுமே விரைந்து வாழ்ந்து மடிந்துவிடும். பொன் சிறைத்தும்பிபோல, உலகுக்கு அவர் தம் முழு ஆற்றலுடன்

நல்லனவே செய்தளித்து விட்டு, அல்லனவற்றைத் தாம் பரிசாகக் கொண்டு சென்றார்.

அவரைப் பெற்ற தாயகம் பிரான்ஸ். அதற்கு அவர் வாழ்வு பெருமை அளித்தது. திட்டக் கனவில் தோய்ந்த அவரது உற்ற தாயகம் எகிப்து.அதற்கு அவர் வாழ்வு பீடளித்தது.பெருவாழ்வுக் காலங்கள் கூடக் காணாத உயிர்த் தேசீயப் புகழை அத் தேசத்திற்கு அவர் பணி வழங்கிற்று. அவருக்கு ஓயாது இடர்செய்த சேயகம் பிரிட்டன். திட்டத்தில் பெரும்பயனுகர்ந்தது அதுவே. உலகுக்கோ அவர் அளித்த திட்டம் ஓருலகத்திட்டம், அதனுடன் ஓருலகப் பண்பும் இணைய அளித்த பெருமை அவருக்கே உரியது.