பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




312) ||-

அப்பாத்துரையம் - 10

லெஸெப்ஸ் முயற்சியில் தளரவில்லை. விரைவில் காலம் அவருக்கு உதவிற்று. அவர் இளமைக்கால நண்பரே பாஷாவின் பீடமேறினார். இதன் பின் லெஸெப்ஸ் 1854 இல் மறுபடியும் உரிமைகோரி முடங்கல் தீட்டினார்.

பாஷா சயீதின் மறுமொழி ஆட்சியாளரின் வழக்கமான மறுமொழி வடிவில் வரவில்லை. நண்பரை எகிப்துக்கே வரவழைக்கும் அன்பழைப்பு வடிவாக அது வந்தது. பாஷா அவருக்கு அளித்து வரவேற்பும் ஓர் அரசியல் தூதுவரை வரவேற்கும் முறையில் அமைந்தது. அவர் நண்பரை நண்பரென்ற முறையிலே ஆர்வமுடன் அணைத்து உண்டாடி உலாவி மகிழ்ந்தார். இவ்வாறு ஆட்சியாளரே நண்பராக அமைந்தாலும், அரசியல் தகுதியும் முறையும் உணர்ந்த லெஸெப்ஸ் அதை உடனே பயன்படுத்திக் கொள்ளவில்லை.அவர் தக்க தறுவாயறிந்துபேசக் காத்திருந்தார் நவம்பர் 15ஆம் நாள் மாலையுலாவின்போதுபேச்சு இயல்பாக லெஸெப்ஸ் கோரிக்கைப் பக்கமாகச் சாய்ந்தது.எடுத்த எடுப்பிலேயே பாஷா திட்டத்தை ஏற்று ஆவன செய்வதாக இன்முகத்துடன் உறுதியளித்தார்.

1854ஆம் ஆண்டு நவம்பர் 15இல் வாய்மொழியாக அளிக்கப் பட்ட இவ்வுரிமை, நவம்பர் 30க்குள் எழுத்து வடிவம் பெற்றது. அரசியல் தொழில் முறை ஏற்பாடுகளின் பின் 1856ஆம் ஆண்டு ஜனவரி 5க்குள் அது துறை நுணுக்க விரிவான அரசியல் பத்திர உரு அடைந்தது.

இவ்வாறு இருவர் நட்பின் அருமையிலே, இருகடல்களின் ணைப்புத் திட்டத்துக்கு விதை தூவப்பட்டது.

1854இலும் 1856இலும் லெஸெப்ஸுக்குப் பாஷா அளித்த இந்தச் சலுகைகளே சூயஸ் திட்டத்துக்கும்ஆட்சிக் குழுவுக்கும் உரிய அடிப்படை மூல உரிமைகளாகும்.அவற்றில் காலத்துக்குக் காலம் சூழ்நிலைக்கும் அனுபவங்களுக்கும் ஏற்பச் சிறிய, பெரிய மாறுதல்கள் செய்யப்பட்டதுண்டு. ஆனால் இச்லுகைகளின் மூல எழுத்துப்படிவமே அவைகளனைத்துக்கும் உரிய அடிப்படைப் பத்திரமாய் அமைந்தது.