பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




316

||-– –

அப்பாத்துரையம் - 10

ஆஸ்டிரியாவும், ருஷ்யாவும் மட்டுமே மனக்குறைப்பட்டன. பிரிட்டன் தன் தூதுவான தானைத் தலைவர் புரூஸ் மூலம் பாஷாவிடம் நேரடியாகவே மனக்குமுறலைத் தெரிவித்துக் கொண்டது.

பிரிட்டிஷ் அரசியலார் இத்துடன் அமையவில்லை. துருக்கியில் பிரிட்டிஷ் தூதரங்க முதல்வராயிருந்த ரெட்கிளிப் பெருமகனார் துருக்கி சுல்தானிடம் மிகுந்த செல்வாக்குடையவர். இதைப் பயன் படுத்தித் திட்ட உரிமைக்குச் சுல்தான் ஏற்பிசைவு அளிக்காதபடி அவரைத் தூண்டவும் பிரிட்டிஷார் முற்பட்டனர்.

இச் சூழ்ச்சியின் விளைவாக, லெஸெப்ஸ் துருக்கி சென்ற போது சுல்தான் அவருக்கு ஆதரவு காட்டவில்லை. அவர் நேரே பிரிட்டிஷ் தூதரங்க முதல்வரைக் கண்டு பேச முயன்றார்.ஆனால் அவரும் நேரிடையாகக் காணவிடாமலே நாட்கடத்தி வந்தார். அதன்மீது 1855ஆம் ஆண்டு ஜூன் மாதம் லெஸெப்ஸ் பிரிட்ட னுக்குச் சென்று முதலமைச்சர் பாமர்ஸ்டனிடம் வாதாடினார். சூயஸ் திட்டம் பிரிட்டனின் நலங்களுக்குக் குந்தகமான தென்றும், அதற்கு ஆதரவு காட்டமுடியாதென்றும் அவர் முடிவாகக் கூறி விட்டார். 'டைம்ஸ்', 'டெய்லி நியூஸ்' போன்ற பிரிட்டிஷ் பத்திரிக்கைகளும் இதே போக்கில் எழுதி அவருக்கு எதிரான சூழலை வளர்த்தன.

உலகரங்கில் பொதுவாகவும், பிரிட்டிஷ் மக்கள் மன்றத்தில் சிறப்பாகவும் லெஸெப்ஸ் தம் திட்டத்திற்கு ஆதரவாக இடை விடாது பிரசாரம் செய்து வந்தார். 1856 இலும் 1857இலும் அவர் மீண்டும் பிரிட்டன் சென்று அரசியலார், பொதுநிலையங்கள், வாணிக நிலையங்கள், கப்பல் கழகங்கள் ஆகியவற்றை நேராகவே அணுகினார். பொதுமக்களிடையே கூட்டங்களில் பேசினார். பத்திரிகையாளர்களிடையே பேசியும் பத்திரிகைகளில் எழுதியும் கருத்துப் பரப்பியும் விளக்கங்கள் தந்தார்.

சூயஸ் திட்டம் அரசியல் சார்பானதல்ல, பொதுான உலக நலம், வாணிக நலங்களுக்குரியது என்பதை அவர் எடுத்துக் காட்டினார். கப்பல்களின் நிலக்கரிச் செலவைக் குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, நாட்டுக்கு நாடு நேச உறவை அது வளர்க்கு மென்பதை எல்லார் உள்ளங்களிலம் பதிய வைத்தார்.