பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

319

குறுகிய

தனிமுறையில் பிரிட்டிஷ் அரசியலார், மக்கள் ஆகிய இரு சாராரின் ஆதரவும் இருந்தும், பிரிட்டனின் நோக்குடைய தேசிய உள்ளம் வேறாகவே அமைந்தது. பிரிட்டிஷ் அரசியல்வாதிகளின் மறைமுக முட்டுக்கட்டை நிலையும் நீடித்தே

வந்தது.

இந்த அரசியல் சிக்கல்களிடையே லெஸெப்ஸின் தன்னலங் கடந்த போக்கும், தொழிலாளர்களிடம் அவர் கொண்ட பாசப்பரிவும் திட்டச் செயலில் அவர் மேற்கொண்ட அரசியல் கடந்த உலக நோக்கும் திட்டத்துக்கு உயிர் மூச்சாய் இருந்து காத்தன. பாஷா சயீதின் நட்பாதரவு அதற்கு எவ்வளவு

சு

ன்றியமையா நலன் என்பதையும் அவர் நன்கு உணர்ந்தார். ஆனால் மேலையுலகில் இதனுடன் இன்னும் நல்ல உறுதி வாய்ந்த காப்பு நலம் தேடும் எண்ணத்துடன் அவர் பிரஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியனை அணுகினார். உலகக் கழகத்துக்கு அவரை ஆதரவாளராக இருக்கும் படி வேண்டினார். மன்னர் நெப்போலியன் இதனை ஏற்றார்.

லெஸெப்ஸுக்கும் பாஷா சயீதுக்கும் அடுத்தபடியாகத் திட்டத்தின் வாழ்வுக்கு உயிர்வலுத் தந்தவர் மன்னர் மூன்றாம் நெப்போலியனேயாவர். பாஷாவின் பெயரைக் கடற்காலின் நடுநிலக் கடல் முகப்பிலுள்ள சயீத் துறைமுகத்துக்கு அளித்து, லெஸெப்ஸ் தம் நண்பர் பால் தமக்குள்ள ஆர்வ நன்றியைத் தெரிவித்திருந்தார். சூயஸ் துறைக்கருகே பண்டைப் பெருமை மிக்க பகுதியில், எழுப்பப் பட்ட நெப்போலியன் கோட்டைக்கு இது போலவே மன்னன் நெப்போலியனின்

பெயர்

சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இருவர் முயற்சிகளுக்கும் மூல உயிர் தந்தவரான லெஸெப்ஸுக்குத் தாம் நன்றி தெரிவிக்கும் முறையில் திட்ட ஆட்சியாளர் சயீத் துறைமுகத்தில் அவர் வீரத்திருவுருவச் சிலையை வீறுடன் எழுப்பியுள்ளனர்.

பாஷா சயீதுக்குப்பின் வந்த பாஷா இஸ்மாயிலின் பெயரும், 20ஆம் நூற்றாண்டில் எகிப்தின் முதல் அரசராய் இருந்த மன்னர் பவூத் பெயரும் கடற்காலில் திமாஷ் ஏரி அருகிலுள்ள இஸ்மாயிலியா நகருக்கும், நடுநிலக் கடல் முகப்பிலேயே சயீத் துறைமுகத்துக்கு எதிரிலுள்ள பவூத் துறைமுக நகருக்கு இடப்பட்டுள்ளன.