பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

321

வெட்ட வேண்டியிருந்தது. இந் நீள அகல ஆழ முழுவதிலும் சில டங்களில் மண்ணையும், சில இடங்களில் மணலையும் வாரிக் கொட்ட வேண்டியிருந்தது. சில இடங்களில் கரும் பாறைகளையே சுரங்கம் வைத்துப் பிளந்து வழிசெய்ய வேண்டியதாயிற்று. இரு புறமும் மண் சரியாமல் வலிமை வாய்ந்த கட்டுமானங்கள், ஆங்காங்கே ஒதுங்குவதற்கான துறைகள், தங்குவதற்கான துறைமுகங்கள் முதலியவை எழுப்பவேண்டும். இவற்றுக்குவேண்டிய மூலப் பொருட்கள், கருவிகள்,வேலை செய்பவருக்கு வேண்டிய குடிநீர் வாய்ப்புக்கள், குடியமைப்பு வசதிகள் ஆகியவை மிகப் பேரளவில் தேவைப்பட்டன.

உரிமைப் பத்திரத்தில் கோரப்பட்டபடி, கடற்கால் வேலை யுடன் வேலையாக நன்னீர்க்கால்வாயின் வேலையும் இணை கூட்டாகவே தொடங்கப்பட்டது. அதனுடன் கடற்கால் வேலை எளிதாகவும், விரைவாகவும் முன்னேறும்படி, முதலில் அதற்கென்று குறிக்கப்பட்ட பாதையருகிலேயே பணியாளர்களும் பணிகளுக்குரிய பொருள்களும் கொண்டு செல்வதற்குரிய தற்காலிகப் பணிமுறைக்கால் ஒன்றும் வெட்டப்பட்டது. இது 20 அடி அகலத்துடனும் 5 அடி ஆழத்துடனும் கடற்காலின் நீளத்தில் ஒரு பகுதி வரை சென்றெட்டிய பின்னரே, கடற்கால் வேலை தொடங்கப்பட்டது.

பாலைவன நீரூற்றுக்களில் இறங்கிய பின்தான் ஆழம் தெரியும் என்பர். லெஸெப்ஸுக்கும் கடற்கால் கழகத்திற்கும் ஏற்பட்ட அனுபவம் இதைப் பேரளவில் உண்மையாக்கிற்று. ஓயாத அரசியல் முட்டுக்கட்டைகள் திட்டமிட்டதற்கு மேற்பட் செலவு, தாங்க முடியாத பணமுடை, வேலை நடைமுறையில் முன் அனுபவமற்ற புதுமை காரணமான எதிர்பாரா இடர்கள், இடையூறுகள் ஆகிய வற்றிடையே அதன் முதல் ஐந்தாண்டுகள் திட்டத்தின் உயிர்ப் போராட்ட ஆண்டுகளாய் அமைந்தன.

சூயஸ் கடற்கால் முழு உலகக் கழகத்தின் தொடக்க மூலதனம் முதலாண்டுகளிலேயே கரைந்துவிட்டது. கழகத்தின் வாழ்வே முறிவடைந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷார் இதற்கிடையே எண்ணற்ற முட்டுக்கட்டைகளையும் தொல்லைகளையும் உண்டு பண்ணினர். எப்படியாவது