பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

323

மன்னர் வற்புறுத்தி, பிரிட்டிஷாருக்குச் சலுகை காட்டினார். அதே சமயம் கட்டாய வேலையின் நிறுத்தத்துக்கு ஈடாக 380 இலட்சம் வெள்ளியும், நிலங்களைத் திருப்பித் தருவதற்கீடாக 300 இலட்சம் வெள்ளியும், நன்னீர்க்கால் பகுதிக்கீடாக 840 இலட்சம் வெள்ளி இழப்பீடாகத் தரவேண்டுமென்று வகுத்து அவர் கழகத்துக்கும் ஆதரவு காட்டினார்.

திமாஷ் ஏரியிலிருந்து நடுநிலக் கடற்கரை செல்லும் நன்னீர்க் கால்வாயின் பகுதியை இடையிடையே நீர் வழங்கும் 'கணுவாய்’ கள் உள்ள குழாயாக்கி அரசியலாருக்கு அளிக்கலாமென்றும் மன்னர் தீர்ப்புச் சலுகை தந்தது. ஆயினும் 1880இல் இது கால்வாயாகவே பின்னால் வெட்டப்பட்டது.

கழகம் நினைத்ததைவிட அறிவார்ந்த மன்னர் நெப்போலியன் தீர்ப்புத் திட்டவேலைக்கு மிகவும் நலம் செய்வதாயிருந்தது.ஏனெனில் கட்டாய வேலை நிறுத்தப்பட்டதன் மூலம் தற்காலப் 'பொறியாண்மை முறை'களையும் இயந்திர சாதனங்களையும் வழங்குவது எளிதாயிற்று. இயந்திர மண்வாரிகளும் (dredges) பிற பெரும் பொறிகளும் இதன்பின் திட்டவேளையில் ஈடுபடுத்தப் பட்டன.

வேலைப்பாட்டின் பெரும் பகுதி நாலு குத்தகை வகுப்புகளுக் கிடையே பகுக்கப்பட்டிருந்தது. முதல் வகுப்பு சயீத் துறைமுகத்திற் குரிய இரேவுகளுக்கான 2,50,000 கன மீட்டர் நீற்றுக் கட்டிப் பாளங்களை (Concrete slabs) உருவாக்கும்பணியேற்றது. இரண்டாவது வகுப்பு கடற்காலின் முதல் 60 கிலோமீட்டர் மணலையும் மண்ணையும் வாரி அப்புறப்படுத்தும் பணி மேற்கொண்டது. மூன்றாம் வகுப்பு இத்தொலை கடந்து எல் கிஸ்ரி வரையுள்ள 13 கிலோ மீட்டர் கடு நிலப்பகுதியின் பாறை பிளக்கும் வேலையிலீடு பட்டது. கடைசி வகுப்பு நான்கிலும் பெரிதாயிருந்தது. அது திமாஷ் ஏரிக்கும் செங்கடலுக்கும் இடையேயுள்ள பகுதியின் பொறுப்பு மேற்கொண்டது.

கடைசி வகுப்புக்குரிய குத்தகை நிலையம் ‘பால் போரல் அலக்ஸாண்டர் லெவாலிங்' என்பது. இதுவே இரண்டாவது வகுப்புக்கும் இறுதிப் பொறுப்பேற்றது.