பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(324) ||

அப்பாத்துரையம் - 10

செங்கடலடுத்த பகுதியிலும் திமாஷ் ஏரிக்கு வடக்கிலுள்ள பகுதியிலும் வேலை எளிதாகவே இருந்தது. வேகமும் மட்டமாக அமைந்தது. ஆனால் இடைப்பட்ட பகுதியில், சிறப்பாக, சாலப், செராப்பியம் வட்டாரங்களில் கடும்பாறைகளில் சுரங்கமிட்டுக் கொண்டே சென்று வழிகாண வேண்டி வந்தது. வேகமும் இங்கே இதற்கேற்ப மிகக் குறைவாகவே அமைந்தது.

கடற்காலின் 100 கல் நீளத்தில் 5இல் 4 பங்கு அதாவது 77 கல் தொலைக்குக் கடற்கால் மேற்பரப்பில் 327 அடி அகலமும், அடித்தலத்தில் 72 அடி அகலமும், 26 அடி ஆழமும் உடையதாகத் திட்டமிடப்பட்டது. மீந்த பகுதியில் மேற்பரப்பகலம் மட்டில் 196 அடியாய் அமைந்தது. கடும்பாறைகளிடையே 220 அடி அகலமும், 90 அடி ஆழமும் உடைய நேர்வழி பிளக்கப்பட்டது. பண்டை நீலாற்றுக் கால்வாய்த் தடத்திலே வெட்டப்பட்ட நன்னீர்க் கால்வாய் 40 அடி அகலமும் 9 அடி ஆழமும் உடையதாகத் திட்டமிடப்பட்டது.

1862ஆம்ஆண்டில் நன்னீர்க் கால்வாய் திமாஷ் ஏரியை அணுகிவிட்டது. அவ்வாண்டின் இறுதியிலேயே கடற்காலும் ஒடுங்கிய முதல் வடிவில் திமாஷ் ஏரிக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டுக்குள் நன்னீர்க் கால்வாய் சூயஸ் துறைமுகத்தை எட்டிற்று.1865இல் வேலை எவ்வளவு தூரம் முன்னேற்றம் அடைந் துள்ளது என்பதைக் காணவும், தக்க ஆய்வுரை கூறவும் பல நாட்டு வாணிகக் கழகப் பிரதிநிதிகளையும் லெஸெப்ஸ் பார்வையாளராக அழைத்தார். 100 பிரதிநிதிகள் அவர் விருந்தினராக வந்திருந்து வேலைகளைக் கண்டு மனநிறைவெய்தினார்.

சூயஸ் திட்ட வகையில் இதற்குள் பிரிட்டிஷ் அரசியலார் நீங்கலாக உலகெங்குமுள்ள அரசியல்களும் மக்களும்பேராதரவு காட்டத் தொடங்கிவிட்டனர். இதன் விளைவாகத் துருக்கி அமைச்சரவையின் மனப்பான்மையிலும் மாறுதல் ஏற்பட்டு வந்தது.1866ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 19ஆம் நாளில் சுல்தான் இறுதியாகத் திட்டப் பத்திரத்துக்குத் தம் ஏற்பிசைவளித்தார். இது மன்னர் நெப்போலியன் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டதாய் அமைந்தது. அதனுடன் முழு உலகக் கழகம் எகிப்தியக் கழகமாக, எகிப்தியச் சட்டங்களுக்கு உள்ளடங்கிய தாக இருக்க வேண்டு மென்பதை இது மேலும் வற்புறுத்திற்று.