அப்பாத்துரையம் – 10
328 || இருபக்கமும் திண்ணிய காரைக்கட்டுக் கரையுடன், ஏரியைவிட மிக ஆழமாக வெட்டப்பட்டுள்ளது. இது கடந்து மூன்று நான்கு கல் பாலைவன மணல் சென்றபின், மீண்டும் கடற்கால் பல்லா ஏரி வழி 8 கல் கரை இணைத்துச் செல்கிறது. அடுத்த 8 கல் தொலை பெருமுயற்சியுடன் பாறையிடையே குடையப்பட்ட பிளவு ஆகும்.
கடற்காலின் நீளத்தில் ஏறத்தாழ நடுப்பகுதியில் அமைந் துள்ளது திமாஷ் ஏரி. கற்கால் அமைக்கப்படுவதற்கு நெடுநாள் முன்னரே இது பாலைவன வறட்சியால் முற்றும் வற்றி உலர்ந்து விட்டது.ஆனால் கடற்காலின் மூலம் அது நிரப்பப்பட்டு, இப்போது மீன் வளமுடையதாக்கப்பட்டுள்ளது. இதையே ஒரு உள்நாட்டுத் துறைமுகமாக்க 1854இல் தரப்பட்ட சலுகைகள் கட்டளையிட்டாலும் இக்கட்டளை நிறைவேறவில்லை. எனினும் கடற்காலில் செல்பவர்களுக்கு அது வாய்ப்பான இடை டைத் தங்கலுடைய ஒரு அகலப் பரப்பாய் உள்ளது. அதன் கரையிலே கால்வாயின் புது வளத்தால் வளம் பெற்ற இஸ்மாயிலியா நகரம் உள்ளது. கெய்ரோ வுடன் இருப்புப் பாதைகள் இணைக்கப்பட்டு அது தற்கால வசதிகள் படைத்த நகரமாய் விளங்குகிறது.
திமாஷ் ஏரி கடந்து 9 கற்கள் பின்னும் கடும் பாறைகள் குறுக்கிடுகின்றன. கடற்கால் அவற்றை ஊடறுத்துக்கொண்டு செல்கிறது. பாறைகளை அப்புறப்படுத்தும் வேலை இங்கேதான் மிகக் கடுமையாய் அமைந்தது.
திமாஷ் ஏரியைவிடக்கைப்பேரி பெரியது. ஆனால் அதைப் போலவே இதுவும் முன்பு உலர்ந்து கிடந்தது. இப்போது அது கடல் நீரால் நிரப்பப்பட்டுள்ளது. இவ்வேரி கடந்து ஆழமற்ற ஏரிப்பகுதி யூடாகவும் மணல்வெளியூடாகவும் 17 கல் தொலை சென்றபின் கடும் பாராகிய ஷாலப் வட்டாரத்தினூடாகக் கடற்கால் செங்கடலில் சூயஸ் துறை சென்று சேர்கிறது.
சயீத் துறைமுகத்தைப் போலவே சூயஸும் பல வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் புதிய கட்டுமானங்களுள் 850 கெஜம் நீளமுள்ள பார அலை தாங்கி முக்கியமானது. தவிர எகிப்திய சுல்தானால் 413 அடி நீளம், 95 அடி அகலமுள்ள ஓர் இரேவும் பி. அண்டு ஓ கழகத்தாரால் 300 அடி நீளம் 85 அடி அகலமுள்ள மற்றொரு இரேவும் அமைக்கப்பட்டுள்ளது.