4. எகிப்தின் புதுவாழ்வு
சூயஸ் திட்டத்தின் முழு வரலாறு உலகளா
ாவியது.
உலக வரலாறு முழுவதும் பரவி, அதையே தன் வரலாறாகக் கொண்டுள்ளது. உலக வரலாற்றையே இரண்டு பெருங்கூறுகளாகப் பிரிக்க அது உதவுகிறது.அதன் முற்பகுதியான நீலாற்றுக் கால்வாய் வரலாறு புகழ் மாண்ட ஒரு தொல்பழங்கால ஊழியின் வரலாறாக முடிவுறுகிறது. அதன் அழிபாட்டிலிருந்து பூத்த புது உலக வாழ்வாக கடற்கால் திட்ட வரலாறு அமைகிறது.
எகிப்திய வரலாற்றின் மீது திட்டத்தின் ஒளி இன்னும் முனைப்பானது. அது எகிப்திய வாழ்வின் மூன்று வரலாற்றூழிகளை மூவேறாகப் பிரித்துக்காட்ட உதவுகிறது. முதல் நீலாற்றுக் கால்வாய் வரலாறு எகிப்திய வாழ்வின் முதலூழியாகவும்; இரண்டாம் நீலாற்றுக் கால்வாய் வரலாறு அதன் இரண்டாம் ஊழியாகவும்; திட்ட நிறைவேற்றம் கடந்த கடற்கால் வாழ்வும் வளர்ச்சியும் அதன் தேசீய மலர்ச்சிக்குரிய புது வாழ்வாகவும் அமைகின்றன.
பரோவாக்களின் முதல் கால்வாய்க்குரிய எகிப்து, புகழின் உச்ச உயர் கொடுமுடிகண்ட எகிப்து - உலகுக்கு நாகரிகமளித்த முதன்மை நாடுகளிலும் முன்னணி நாடாக அன்று அது நிலவிற்று. வானளாவிய தமிழகக் கோபுரங்களைக் கூடக் குழந்தைகளாக மடியில் தவழவிடக்கூடிய அளவு பாரித்துயர்ந்த பாரக் கூம்புகள் (Pyramids) அப்பாரக் கூம்புகளையும் உலகையுமே பார்த்து ஏளன நகை நகைப்பதுபோல அமைக்கப்பட்டுள்ள கன்னிமுகச் சிங்கக் குன்றம் (Sphynx) ஆகிய அவ்வூழி எகிப்தின் சாதனைகளைக் கண்டு உலகம் இன்று மலைத்து நிற்கிறது. உலகம் வாழ்வு காணுமுன் ஆயிரக்கணக்கான ஆண்டு முழு வரலாறு கண்ட, உலகில் மொழிகள் உருவாகுமுன் மொழியும், எழுத்துமுறையும் இலக்கிய இலக்கணங் களும், கலையும் அறிவுத்திறனும் அறிவாராய்ச்சிகளும்