பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

335

ஊழியிலேயே இஸ்லாமிய உலகுதன் உலகப் புகழ் ஊழிகண்டது. ஆனால்அப்புகழ் ஊழியின் எல்லை தாண்டி, எகிப்து புதுப் புகழ்

ஊழியில் காலெடுத்து வைத் துள்ளது.அதனுடன் அராபிய இன எழுச்சிக்கும் இஸ்லாமிய உலகின் புது வாழ்வுக்கும் அதுவே தலையூற்றாகவும் உயிர்த்தூண்டுதலாகவும் அமைந்து வருகிறது. இவ்வெல்லா ஒளிகளுக்கும் ஒளி ஊட்டி, எல்லாப் புகழ்வாழ்வு களையும் தன் இடையிருட்காலத் தளர் ஒளிக் கதிர்களாக கொண்ட தமிழகத்தின் ஓருலகப் புது மலர்ச்சிக்கும் அதுவே ஒரு முன்னறி குறியாய் அமையத்தக்கது என்னலாம்.

மேலையுலகின் ஒருநாடு வளம் பெறவேண்டுமானால், அது கீழ்த்திசை வாணிக வழியின் ஆட்சி பெற வேண்டும். மேலை யுலகில் செல்வாக்கும் வலிமையும் ஆதிக்கமும் வேண்டுமானால், கீழ்த்திசையாண்டு, கீழ்த்திசை வளமாக வேண்டும். ஆனால் இந்த

ண்டும் சூயஸையும் எகிப்தையும் கைக்கொள்ளாமல் முடியாது இதுகே பேரறிஞன் லைப்னிட்ஸ் நெப்போலியனுக் களித்த அரசியல் அறிவு நுட்பம்.

ஒரு நூற்றாண்டு சென்றே ஹிட்லரும் முஸ்ஸோலினியும் இதனை உணர்ந்து மேலையுலகெங்கும் வீறிட்டு வெற்றி முழக்கி எகிப்தை நோக்கி விரைய முயன்றனர். அம்மூவர் அவாவும் நிறைவேறாமல் எகிப்தைக் காத்தது பிரிட்டன்தான். ஆனால் அது எகிப்தை எகிப்துக்காகக் காக்கவில்லை. தனக்காகவே காத்தது. அது மட்டுமல்ல.அவர்கள் கண்ட உண்மையை அவர்கள் துணையுடன் காணவே, அதற்கு அரை நூற்றாண்டும், அவர்களுக்கு ஏற்பட்ட முடிவின் படிப்பினை உணரப்பின்னும் அரை நூற்றாண்டும் சென்றன.

20ஆம் நூற்றாண்டின் முதற் பாதி கழிந்த பின்பே பிரிட்டன் வல்லாளர் வழிநின்று செயலாற்றத் துணிந்தது. ஆனால் வரலாற்றில் முதல் தடவையாக, மேலையுலக வல்லாண்மை மரபை, ஒரு புதிய கீழ்த் திசைத் தேசீய மரபு எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளது.

அலக்ஸாண்டர் - சீசர் - நெப்போலியன் மரபின் மாலைச் செவ்வொளி தரும் அழகு வண்ணக் காட்சி இதுவே.