பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




336

||- -

அப்பாத்துரையம் - 10

பிரிட்டனின் வல்லாண்மை மரபுப் போக்கின் முதற் படியை நாம் 1874 - 75இல் காண்கிறோம். முந்திய ஆண்டில் சூயஸ் கடற்கால் ஆட்சி உலகப் பொதுக்குழு ஒன்றின் பொறுப்பில் இருப்பது நலம் என்று டார்பிப்பெரு மகனார் விரும்பினார். அடுத்த ஆண்டில் பிரிட்டன் உலகக் கழகத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கி, கடற் காலாட்சியில் அக்கரையும் பங்கும் கொண்டது. ஆனால் இவற்றுடன் பிரிட்டனின் உள்ளவா ஒரு சிறிதும் நிறைவுற வில்லை. சூயஸ் நில இணைப்பையே பின்னும் வேறிடம் வெட்டி, ஒரு மாற்றுக் கடற்கால் அமைக்க வேண்டுமென்று பிரிட்டிஷ் கப்பல் உரிமையாளர் பிரிட்டிஷ் அரசியலாரிடம் வேண்டினர். அரசியலார் இதைக் கருத்தில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் அதற்குள்ளாக, எகிப்தில் தம் பிடியை வலுப்படுத்தி, கடற்காலைத் தம் வசப்படுத்திவிடும் வாய்ப்பு அவர்களுக்குக் கட்புலனாகி வந்தது.

உலகக் கழகத்தில் பெருவாரியான பங்குகளைப் பிரிட்டிஷ் முதல்வர் வாங்கியதனால் பிரிட்டனில் அரசி முதல் ஆண்டிவரை எல்லாரும் மனநிறைவு கொண்டனர். ஆனால் எகிப்தில் நிலை வேறு வகையாயிருந்தது. இது வரை யார் ஆண்டாலென்ன, எவர் மாண்டாலென்ன என்றிருந்தார்கள் எகிப்தியர்கள். இந்நிலை மாறி, முதன் முதலாகத் தேசிய உணர்வு தூண்டப்பட்டது. தம் ஊதாரித் தனத்தால் தேச உடைமையையே அயலானுக்களித்த பாஷா மீதும், அவ்வயலார் மீதும் மக்கள் உள்ளம் கொதித்தெழுந்தது.1881 - 82இல் இது பெருங் கிளர்ச்சியாக மூண்டது.

கிளர்ச்சியை அ க்கப் பாஷா எவ்வகை நடவடிக்கையும் எடுக்கவில்லை.பிரஞ்சுக்காரர்கூட ஒதுங்கியே இருந்துவிட்டனர். கிளர்ச்சிகளில் ஐரோப்பியர் உடைமைகள் அழிவுக்காளாயின. ஜூன் 11இல் அலக்ஸாண்டிரியாவில் ஐம்பது ஐரோப்பியருக்கு மேல் உயிரிழந்தனர். பிரிட்டிஷார் இத்தறுவாயைப் பயன்படுத்திச் செயலில் விரைந்தனர். பிரிட்டிஷ் படைத் தலைவர் சர் கார்னெட் அலெக்ஸாண்டர் உல்ஸ்லி கடற்காலில் கப்பர் போக்கு வரவையே தற்காலிகமாக இடைமறித்து வைக்க உத்தரவிட்டார். கடற்படைத் தலைவர் செய்மர் அலெக்ஸாண்டிரியாவைத் தாக்கி அதைத் தம் கட்டுக்குட்படுத்தினார். பாதுகாப்புக்கும் விரைந்தார்.

கடற்கால்