பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

337

பிரஞ்சுக்காரரும் இப்போது உதவிக்கு வந்தனர். இரு நாட்டுக் கப்பற்படைகளும் போரிலீடுபட்டன. ஆகஸ்டு 21ஆம் நாள் இஸ்மாயிலியா நகரம் பிரிட்டிஷார் கைப்பட்டது. செப்டம்பர் 13க்குள் கலகம் அடக்கப்பட்டு விட்டது. ஆனால் எகிப்திலும் சூயஸிலும் பிரிட்டிஷார் பிடி வலுவடைந்தது.

தனால்

பிரஞ்சுக்காரர் தயக்கத்தால், அவர்கள் நடு உலகில் முன் பெற்றதெல்லாம் இழந்தனர். பிரிட்டிஷார் உடனடிச் செயலால் நடு உலகாட்சியில் முன்னேறினர். சூயஸ் கடற்கால் பாதுகாப்பிற்கும் எகிப்தின் பாதுகாப்பிற்கும் இனி பொறுப்பு வகிக்க வேண்டியவர்கள் தாங்களே என அவர்கள் அறிவித்தனர்.

இந்த அறிவிப்பை மற்ற உலக நாடுகள் எளிதில் ஏற்கவில்லை. ஆனால் 1888 அக்டோபர் 29இல் கான்ஸ்டான்டினோப்பிளில் வடிய பல நாட்டுப் பிரதிநிதிகளும் சூயஸ் கூட்டு ஒப்பந்தம் ஒன்று வகுத்தனர். அதன்படி எகிப்தின் சார்பில் சூயஸ் கடற்கால் ஆட்சியின் பாதுகாப்பை பிரிட்டன் மேற்கொள்ள இசைவு அளிக்கப் பட்டது. ஆனால் போர்க் காலத்தில்கூட, எகிப்து போரில் இறங்க நேர்ந்தாலன்றி, எல்லா நாடுகளின் கப்பல்களுக்கு கடற்கால் திறந்தே இருக்க வேண்டுமென்று தீர்மானம் செய்யப்பட்டது.

இக்கூட்டு ஒப்பந்தத்தில் பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி ஆஸ்டிரியா, ஹங்கேரி, இத்தாலி, பிரஷ்யா, ஸ்பெயின், துருக்கி, நெதர்லாந்து (ஹாலந்து) நாடுகள் சார்பில்

கையொப்பங்கள் இடப்பட்டன.

ஆகிய

அமைதி நாடி மேற்கொள்ளப்பட்ட கான்ஸ்டான்டி னோப்பிள் ஒப்பந்தம் நடு உலக வாழ்வின் அமைதிமீது எறியப்பட்ட ஒரு கல் ஆயிற்று.

பிரிட்டன் எகிப்தை முழுதும் ஆட்கொள்ளக் கனவு கண்டது அதன் மூலம் கீழையுலகின் வாயிலான சூயஸைத் தன் பிடிப்பில் வைத்துக் கொள்ள எண்ணிற்று. அதே சமயம் தன் வாய்ப்புக்களை நழுவிட்டுவிட்ட பிரான்சு அவற்றை மீட்டும் பெற அவாவிற்று. பிரிட்டன் அவற்றை கைப்பற்றுவதைத் தடுக்கவும்