பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




338

11-

அப்பாத்துரையம் - 10

விரும்பிற்று. இது காரணமாக அது எகிப்து மீது துருக்கியின் மேலுரிமையை வற்புறுத்தத் தொடங்கிற்று.

துருக்கியின் பாதுகாப்புப் பற்றி மிகவும் கவலை தெரிவித்த பிரிட்டன் இப்போது எகிப்தின் பாதுகாப்பில் அடுத்த ஒரு நூற்றாண்டின் உலக வரலாறு இதுவே என்று கூறலாம்.

சினாய்

சூயஸ் பகுதியை உள்ளடக்கிய நிலத்தொங்கலிலிருந்து எகிப்து தன் படைகளைப் பின்வாங்கிக் கொள்ள வேண்டுமென்று துருக்கி பிரான்சின் தூண்டுதலால் கட்டளையிட்டது. துருக்கியே அப்பகுதிவரை இருப்புப்பாதை இடவும் முனைந்தது. ஆனால் அதே சமயம் எகிப்தின் பக்கம் நாடவேண்டாமென்று பிரிட்டன் அதற்கு எச்சரிக்கை அனுப்பிற்று. பிரிட்டிஷ் கப்பல்கள் எகிப்துக் கரைக்கு அனுப்பப்பட்டன. அதன் மேல் துருக்கி தன் எழுச்சிகளை அடக்கிக்கொண்டு பணியவேண்டியதாயிற்று.

அந்நூற்றாண்டிலேயே சூயஸ் வழி செல்லும் உயிர் வழியில் 1839இல் பிரிட்டன் ஏடனைக் கைப்பற்றிக் கொண்டது போல, இத்தாலி மஸாவா, பெய்லுல் ஆகிய பகுதிகளையும், பிரிட்டனும் இத்தாலியும் ஸோமாலிலாந்தின் இருபகுதிகளையும், பிரான்சு டுனிசியாவையும், ஜீபூதியையும் கைப்பற்றிக்கொண்டன.இத்தாலி 1911லும் 1922லும் டோடகானிஸ் தீவுகளையும் லிபியாவையும், 1936லிருந்து அபிசீனியாவையும் அல்பேனியாவையும் தன்வயப் படுத்திக் கொண்டிருந்தது. இவற்றுக்கிடையே பிரிட்டன் 1899 ஜனவரியில் எகிப்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு சூடானிலும் தன் பாதுகாப்பாட்சி நிறுவிற்று.

நடுநிலக்கடலில் இத்தாலி பிரான்சின் செல்வாக்குக் கண்டு தான் அச்சமும் பொறாமையும் கொண்டது. பிரிட்டன் முன்னேற்றத்தை அது வெறுக்கவில்லை. அது பிரான்சின் வேகம் தடுக்கவும் தன் வளர்ச்சி ஏக்கவும் பயன்படும் என்றே நினைத்தது. ஆனால் இத்தாலியின் அச்சத்தைப் பயன்படுத்தி அதனுடனும் ஆஸ்டிரிய வுடனும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து ஜெர்மனி மிக வேகமாக முன்னேறி வந்தது. ஜெர்மன் பேரரசர் கெய்ஸர் இரண்டாம் வில்லியம் 1898இல் துருக்கி சுல்தானால் வரவேற்கப் பட்டு, கான்ஸ்டான்டினோப்பிளுக்கும் பாலஸ்தீனத்துக்கும் வருகை தந்தார்.1892இல் துருக்கியுடன் நேச உறவு கொண்டு அவர்