பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




340

||--

அப்பாத்துரையம் - 10

துருக்கிப் பேரரசுப் பகுதியாகக் கருதப்படும் என்று துருக்கிய வெளி நாட்டமைச்சர் இச்சமயம் கூறிவந்தார்.ஆகவே பிரிட்டிஷார் டிசம்பர் 18இல் எகிப்து மீது துருக்கி மேலுரிமை முடிந்து விட்டதென்றும் அப்பாஸ் ஹில்மி பதவியிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டதாகவும் அறிவித்தனர். இளவரசர் ஹுசேன் காமில்பாஷா கிட்டத்தட்டச் சுல்தானுக்கு இணையான மதிப்புடன் எகிப்தின் ஆட்சியுரிமை அளிக்கப்பட்டார். எகிப்து பிரிட்டிஷாரின் காப்பாட்சிக்குள்ளாயிற்று.

கடற்கால் பகுதியின்மீது துருக்கியர் நடுப்பகுதி யூடாகவே தாக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குண்டுகள் வடக்கிலும் தெற்கிலுமே வீசப்பட்டன. 1915 ஜனவரி 26ஆம் நாளன்று, கண்டாராவுக்கக் கிழக்கே ஏழுகல் தொலைவில் அகழ் அரண்காப்புச் செய்து கொண்டு துருக்கியர் பிரிட்டிஷ்படையின் மீது தாக்கினர். இதனால் ஜனவரி 27ஆம் நாளில் கடற்கால் போக்குவரவு முழுதம் நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. அதனுடன் அப்பகுதி இடர்ப்பகுதி என்றும் அறிவிக்கப்பட்டது.

கடற்காற்பகுதி கடந்து எகிப்துமீது படையெடுக்கவும்

துருக்கியர் எண்ணியிருந்தனர். ஆனால் ஒன்றிரண்டு மாதங்களுக்குள் போர் துருக்கிக்கு எதிராயிற்று. கடற்கால் பகுதிக்குரிய இடர் அகன்றது. எகிப்துமீது படையெடுக்கும் கருத்தையும் கைவிட்டுத் துருக்கிப் படைகள் பின்னேறின.

கிழக்கிலிருந்து மட்டுமன்றி, மேற்கிருந்தும் எதிரிகள் எகிப்தைத் தாக்க எண்ணினர். ஆனால் செனூஸி வழியாக அவர்கள் படை யெடுத்து வந்தபோது முறியடித்துத் துரத்தப்பட்டனர்.

1915இல் கடற்காற் பகுதிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. எதிரிப் படைகள் பாலஸ்டினில் குவிக்கப்பட்டன. ஆனால் இதற்குள் பிரிட்டினின் குடியேற்ற நாட்டுப்படைகளும் கடற்கால் பகுதியில் குவிக்கப்பட்டதனால் நெருக்கடி விரைந்து தளர்ந்தது. 1917-18இல் துருக்கிப்படைகள் பாலஸ்தீனத்திலேயே முறிவுற்றன.

வெற்றிற்குப் பின் 1918இல் ஏற்பட்ட வெர்ஸெயில் ஒப்பந்தம் பிரிட்டனுக்கு எகிப்தில் முன்னிருந்த உரிமைகள் யாவற்றையும் மீண்டும் வலியுறுத்திற்று.