பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




342 ||.

அப்பாத்துரையம் - 10

எவ்வளவு வேண்டுகோள் விடுத்தும், இத்தாலியின் போக்குத் தங்கு தடையற்ற போக்காகவே தொடர்ந்தது. ஏனெனில் எகிப்தைப் போரிலீடுபடுத்திப் பிரிட்டன் தானும் போரில் இறங்கினா லல்லாமல் மூலச் சலுகைப் படியும் சூயஸ் ஒப்பந்தப்படியும் கடற்காலை இத்தாலிக்கு மூடிவிட வழியில்லா திருந்தது.

1939இல் இத்தாலி சார்பில் முஸ்ஸோலினி கடற்கால் ஆட்சியிலும் உலகக் கழகத்திலும் செயலாட்சிப் பங்கே வேண்டு மென்று கோரினார். ஆனால் உலகக் கழகத்தின் சட்டத்தில் இதற்கு இடம் இல்லாததால் அவர் எண்ணம் ஒரு சிறிதும் ஈடேற வழியில்லாது போயிற்று.

இரண்டாம் உலகப் போரில் கடற்கால் பகுதிக்கும் எகிப்துக்கும் உள்ள இடாநிலை முதல் உலகப் போர்க்காலத்தில் இருந்ததைவிட மிகவும் பெரிதாகவே அமைந்தது. உண்மையில் போரின் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நடு உலகப் பகுதிப் போரே நேச நாடுகளுக்கு உயிர்ப் போராட்டமாயிற்று.

போர்த் தொடக்கத்தில் எதிரிக்கப்பல்கள் கடற்காலிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டன. ஆனால் கால்வாயின் உலகப் பொதுச் சேவை இப்போது எதிரிகள் வகையில்கூட ஒரு சிறிதும் தளராமல் பாதுகாக்கப்பட்டது. அவை வெளியே இடையூறின்றிச் செல்ல இசைவு தரப்பட்டதுடன், கைதாகாமல் கரையோரத்தில் உலவவும் விடப்பட்டன. கடற் சட்டப்படி கரை எல்லை கடந்த பின்னரே அவை எதிர்ப்புக்கு ஆளாயின.

போர்த் தொடக்கத்தில் எகிப்திலுள்ள பிரிட்டிஷ் படைகள் ஐரோப்பா செல்ல நேர்ந்தது. ஆஸ்திரேலிய, நியூஸீலாந்துப் படைகளும், இந்தியாவின் இருகாலாட் படைகளும் எகிப்துப் பாதுகாப்பைப் பொறுப்புடன் ஏற்றன.

முதல் உலகப் போரில் துருக்கி வகித்த நிலையையே இப்போது இத்தாலி மேற்கொண்டது. சூயஸ் கடற்கால் வழியாக இத்தாலியக் கப்பல்கள் செல்வதையும் அருகே ஊடாடுவதையும் தடை செய்யாமல் இருக்க வேண்டி வந்தது. இத்தாலி போரில் இறங்கியபின் நிலைமை இன்னும் மோசமாயிற்று. கடற்கால் பகுதி கிட்டத்தட்ட முற்றுகை நிலைக்கே ஆளாயிற்று. எண்ணெய்த் துரப்புரவுச் சாலைகளைக் காக்கும் பொறுப்பு மிகப்