பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

357

பின்னும் புதிய உலகின் வாழ்வுடன், உலகின் புதிய வாழ்வுடன் வாழ்வாக அதன் வளமும் வளர்ச்சியும் தொடர்ந்து வந்துள்ளன.

தென் அமெரிக்காவும் வட அமெரிக்காவும் மெக்ஸிக்கோ வளைகுடாவடுத்தே ஓர் இடைநிலைக் கோட்டின் மூலம் கூடு கின்றன. இக்கூடற்பகுதியை நடு அமெரிக்கா என்று கூறுவதுண்டு. மனித இன நாகரிகத்தின் உயிர்மையங்களுள் இது ஒன்று. பழைய உலகில் தமிழகம், சீனம், பாபிலோன், எகிப்து ஆகியவற்றுடன் தோழமை கொள்ளும் புது உலகப்பகுதி இது. மேலையுலகினர் அப்பகுதியில் கால் வைத்த அன்றே, அப்பகுதியின் மிகப் பழைமை வாய்ந்த ‘மய’ நாகரிகம் முழுவளர்ச்சியடைந்து முற்றி, அதன் பின்வற்றி மரபிழந்து மறக்கப்படும் நிலை அடைந்திருந்தது. அதன் அழிபாட்டின் மீது வளர்ந்த ங்கா' நாகரிகம் முழுமலர்ச்சிப் பருவ மெய்தியிருந்தது.

தமிழக, தென்கிழக்காசிய நாகரிகங்களுடன் நடு அமெரிக்கா வின் இப்பழைய நாகரிகங்கள் மிகத் தொல் பழங்காலத் தொடர் புடையவை என்று பழைமையாராய்ச்சி யாளர் கருதுகின்றனர். வட ஆசியா, வட அமெரிக்காவுடன் ஒட்டிக்கிடந்த நாட்களில் தென் கிழக்காசியாவிலிருந்து பரவிய மக்களே அமெரிக்கப் பழங்குடிகள் என்று எண்ணுகின்றனர் சிலர். மண்ணியல் நூலாராய்ச்சியாளர் அமெரிக்காவின் நடுப்பகுதியும் மேல் பகுதியும் பண்டைத் தமிழகப் பகுதிகள் கடல் கொள்ளப்படுமுன், அதனுடன் தொடர்புபட்டுக் கிடந்த குமரி மாகண்டத்திலிருந்து பிரிந்து சென்று விட்ட பகுதி களே என்று கருத்துரைக்கின்றனர்.

மேலை நாட்டவர் புது உலகம் காண நேர்ந்தது புது உலக அவாவின் பயனாகவோ, புது உலகக் கனவின் பயனாகவோ, அல்ல. தமிழக வாணிக அவாவாலும், தமிழகக் கனவாலுமே அதைக் கண்டனர். அதுவும் இந்தியா என்று கருதியே அதைக் கைக்கொண்டனர். தமிழகக் கனவால் வந்த அந்த மாநிலத்தில் தமிழக வழிகாணும் அவாவே பனாமாக் கனவாக வளர்நத்து. அவ் வளர்ச்சியும் பண்டைத் தமிழக மாநிலப் பகுதியில், பண்டைத்தமிழக, தென் கிழக்காசியத் தொடர்புடைய நாகரிகம் வாழ்ந்த பகுதியில் அமைவுற்றது.