பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

363

முந்தியதோ சூயஸின் எகிப்திய ஒப்பந்தத்தைப் பின்பற்றி முழுநில உரிமையும் நிலவரவுரிமையும் கொலம்பியா விடமே விட்டு வைத்திருந்தது.

வைஸ் பெற்ற ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் இறுதி ஒப்பந்தம் நிறைவேறும் வரை அதுவே நீடித்தது என்பதும், அது ஏற்படத்தக்க அரசியல் சூழ்நிலைகளையும் மாறுபாடுகளையும் அதுவே உருவாக் கிற்று என்பதுமேயாகும்.

அடுத்த ஆண்டு மே 10ஆம் நாள் உலகெங்கும் பல நாடுகளி லிருந்தும் வந்த பிரதிநிதிகள் அடங்கிய சர்வதேசப் பேரவை ஒன்று கூட்டப்பட்டது. கடலிணைப்புத் திட்டம் பற்றியும், கடலிணைப்புக் குகந்த வழிகளைப் பற்றியும் அது விரிவாக விவாதித்தது.இப்பேரவை யில் மொத்தம் 175 உலகப் பிரதிநிதிகள் இருந்தனர். அமெரிக்க இணையரசின் சார்பில் 11 பிரதிநிதிகள் வந்திருந்தனர். பிரஞ்சுப் பிரதிநிதிகளிடையே சூயஸ் திட் முதல்வர் பெர்டினாண்ட் டிலெஸெப்ஸ் நடுநாயக இடம் வகித்தார்.

வழிகள் பலவற்றுள்ளும் பனாமா வழியே செயல் முறைக்கு கந்தது என்றுபேரவை தேர்ந்தெடுத்தது.கடற்கால் கடல் மட்டக் காலாகவே அமையவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. திட்டத்துக்கான செலவு 24 கோடி அமெரிக்க வெள்ளிகள் என மதிப்பிடப்பட்டது.

1879 ஆகஸ்டு 17இல் கொலம்பியாவிடமிருந்து வைஸ் பெற்ற கடலிணைப்பு உரிமை வாங்கப்பட்டு, திட்ட நிறைவேற்றத்துக் கான பிரஞ்சுக் கூட்டுக் கழகம் அமைகப்பட்டது. சூயஸ் திட்டத் துக்காக அமைந்த கழகத்தைப் போலவே இதுவும் முழு உலகக் கழகம் (Compagnie Universelle) என்ற பெயருடன் லெஸெப்ஸின் தலைமையில் 1880 ஆம் ஆண்டு ஜனவரி 10இல் நிறுவப்பட்டது. அடுத்த ஆண்டுக்குள் கடற்கால் வேலையே தொடங்கப்பெற்றது.

சூயஸ் திட்டத்தில் எதிர்ப்பிடையே செயல் வெற்றி கண்டவர் லெஸெப்ஸ். ஆனால் பனாமாத் திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்த ஊழியே இருளார்ந்த இடிமின்னல் ஊழியாய் அமைந்தது. இன்றைய கடற்காலில் அட்லான்டிக் கடலோர முள்ள முதல் ஏழுகல் தொலைவுள்ள பகுதியே லெஸெப்ஸ்