364
அப்பாத்துரையம் – 10
கடல்
ஊ ழியின் முழுமுயற்சிக்குரிய பகுதியாகும். அது மட்டத்திலேயே அமைந்த பகுதி.இது வெட்டுவதற்கு எளிதானாலும், வெட்டிய இடத்தை உறுதியாகக் காப்பதற்கு அரிதாயிருந்தது. அத்துடன் சதுப்பு நிலக் காடுகளுக்குரிய நோய்கள் உழைப்பவர்கள் உழைப்பின் ஊதியம் பெறுமுன் அவர்கள் உயிரைக் குடிப்பவையாயிருந்தன.
பிரஞ்சுக் கழகத்தினரும் லெஸெப்ஸும் ஒன்பது ஆண்டுகளாக இப்பகுதியில் காட்டிய தீரமும் விடா முயற்சியும் பெரிது. ஆனால் தொகுதி தொகுதியாகத் தொழிலாளர்கள் கொண்டுவந்து இறக்கு மதி செய்யப்பட்டும், திட்ட மதிப்பீட்டின்படியான பணமுழுவதுமே செலவுசெய்தும், திட்டத்தில் பத்தில் ஒரு பங்கு வேலை கூட முடியவில்லை. அதனுடன் அச்சுறுத்திப் பலவந்தமாகத் தொழிலாளரைத் திரட்டிவந்தால்கூட அவர்கள் பனாமாவின் பெயர் கேட்டவுடன் நடுங்கும் நிலை ஏற்பட்டது. ஏனெனில் தொழிலாளர் கல்லறை என்ற பெயருக்கே அது உரியதாயிற்று.
புகழுக்குப் பதில் எட்டுத் திசைகளிலிருந்தும் இகழும் இடித்துரைகளுமே லெஸெப்ஸின் காதுகளைத் தாக்கின. அவர்நிலை அன்று குளவிக்கூட்டில் கையிட்டவன் நிலையாயிற்று.1888ஆம் ஆண்டு மனநைவுற்றுஅவர் தலைமைப் பதவி துறந்து தாயகம் சென்றார். ஆனால் அங்கும் அவர் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி, சட்டத்தின் தண்டனைகளுக்கும்