பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

369

ஆட்சியுரிமையும் கொலம்பியா வுக்கே என்றும் உரியது என்பது தெளிவாக வகுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க இணையரசு திட்டப் பணியை 4 ஆண்டுகளில் முடிக்க வேண்டுமென்றும், அதன்பின் ஆண்டுதோறும் 21/2 லட்சம் வெள்ளியும் அளிப்பதென்றும் உறுதி செய்யப்பட்டது.

கொலம்பியாவுக்கே மிகவும் சாதகமாயிருந்த இந்த ஒப்பந்தத் துக்கு அமெரிக்க இணையரசு மன்றம் இணக்கம் அளித்துவிட்டது. ஆனால் கொலம்பியா அரசு மன்றம் 'மீனம் மேடம் பேசி' மறுத்தது. அமெரிக்க இணையரசுத் தலைவரான தியோடார் ரூஸ்வெல்ட் கொலம்பியா அரசியல்வாதிகளின் இந்தப் பித்தலாட்டங்கள் கண்டு கடுஞ் சீற்றங்கொண்டார். அவர்கள் செய்த அவமதிப்புக்குத் தண்டனையாக, அவர்களை எதிர்த்து நீண்ட நாள் பிரிவினைக் கிளர்ச்சி செய்து வந்த பனாமாவுக்கே ஆதரவளித்தார்.

1903, நவம்பர் 3இல் பனாமா பிரிவுற்றுத் தனிச் சுதந்திரச் சுயாதீனக் குடியரசாயிற்று.அவ்வாண்டிலேயே புதிய குடியரசுடன் திட்டத்துக்கான புதிய ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

1904 மேல் 4இல் பழய பிரஞ்சுக் கழகத்தின் உரிமை உடைமை கள் யாவும் 4 கோடி அமெரிக்க வெள்ளி விலைக்கு முறைப்படி அமெரிக்க இணையரசால் வாங்கப்பட்டது. அதற்குரிய பத்தினம் பனாமா நகரிலேயே நிறைவேறிற்று.

அடி உயரம்

400

300

109 பிராப்ளோர்ப்

பூட்டுக்கள்

100 பதிபிக்கடல் மட்டம்

பெட்ரோ விகுவெல் பூட்டுக்கள்

மீராய்னோர்.ஏசி

பனுமா கடற்கால் மட்டங்கள் - பூட்டுக்கள்

கேதன் ஏரி மட்டம்

கால்லியர்டுப்

பிளவு

40

30

15

(எண்கள் கல் தொலைவுகள்)

பூட்டுக்கள்

கேதன்

-500

404

-100

-200

100

கூட்டம்

அடி உயரம்

அமெரிக்க

ணையரசும் புதிய பனாமாக் குடியரசும் செய்து கொண்ட ஒப்பந்தம் கடற்கால் திட்டத்துக்காகக் கடற்கால் பகுதிக்குரிய நில முழுவதையும் அமெரிக்க ணையரசுக்கே நிலவரமாக அளித்து விட்டது. அதன் பயனீடு,