பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




370) || __ __

அப்பாத்துரையம் - 10

செயலாட்சி, உடைமை உரிமைகள் ஆகிய எவற்றிலும் பனாமாக் குடியரசுக்கு எத்தகைய தொடர்பும் கிடையாது. அப்பகுதியில் கடற்பாலாகவோ மற்றெவ் வழியிலோ போக்குவரவுக்கு வேண்டிய பாதைகள் அமைப்பது முதலிய எல்லா உரிமைகளும் அதற்குரிய துணை வாய்ப்புக்களான உரிமைகளும் முழுமையாக அமெரிக்க இணையரசு புதிய பனாமாக் குடியரசின் விடுதலை உரிமையை மதித்து அதற்கு உத்தரவாதமளித்தது.அத்துடன் அது புதுக்குடியரசுக்கு உடனடித் தொகையாகக் ஒரு கோடி வெள்ளியும், ஆண்டுதோறும் 21/2 இலட்சம் வெள்ளியும் அளிக்க உறுதி கூறிற்று.

1936லும், 1955லும் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த அடிப்படை மாறாமலே ஆண்டு தோறும் அளிக்கப்படும் தொகைமட்டும் 1936ல் 4,30,000 வெள்ளியாகவும், 1955இல் 19,30,000 வெள்ளியாகவும் உயர்த்தப்பட்டது.

உலக வளத்தில் மட்டுமின்றி, ஆற்றலிலும் பெரிய வல்லரசான இணையரசின் வாழ்விலும் புதிய குடியரசின் வாழ்விலும் பனாமாத் திட்டம் புத்தொளி வீசி வருகிறது.

சூயஸ் காலின் திட்டத்தைப் போலவே பனாமாக் காலின் பணியும் ஏறத்தாழப் பத்தாண்டுகளே பிடித்தது. அதுவே 1904மே 4இல் தொடங்கப்பெற்று 1914 ஆகஸ்டு 15க்குள் முடிவடைந்து விட்டது.

பொதுவாக அட்லான்டிக் மாகடல் அமெரிக்காவுக்குக் கிழக்கிலும் பசிபிக் மாகடல் அதற்கு மேற்கிலும் கிடக்கின்றன. ஆனால் கடற்கால் வெட்டப்பட்டுள்ள இடத்தில் பனாமா நில இடுக்கு ஒரு சிறிது பாம்பு வளைவாக வளைந்து கிடக்கிறது. இதனால் கடற்காலைப் பொறுத்த அளவில்,அதன் அட்லான்டிக் மாகடல்வாய் மேற்காகவும், பசிபிக்மாகடல் வாய் கிழக்காகவும் கிடக்கின்றன.

தன் கிழக்கில்

பசிபிக்மாகடல் முகத்திலுள்ள

அது

'பல்பாவோ'த் துறைமுகத்திலிருந்து தொடங்கி வடமேற்கில் அட்லான்டிக் மாகடல் முகத்தில் ‘கிரிஸ்டோபல்' துறைமுகத்தில் சென்று முடிகிறது.