பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

373

ஏனெனில் பனாமாத் திட்டத்தில் இவை யாவும் உலகம் முன் என்றுங் கண்டிராத பாரிய அளவில் தேவைப்பட்டன.

திட்டவேலையில் மொத்தம் 20 கோடி குழிக்கோல் (கனகச) அளவான மண்ணும் பாறையும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. கேதன் அணை யொன்றில் மட்டும் 230 இலட்சம் குழிக்கோல் அளவான மண்ணும் பாறையும் ஈடுபடுத்தப்பட்டன.430 இலட்சம் குழிக்கோல் நீற்றுக்காரை (Concrete) வேலையில் பயன்படுத்தப் பெற்றது.

பூட்டுக் கால்வாய்களும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களும் இதுவரை படகுகள், சிறு கலங்களுக்காகவே அமைந்தவை பனாமாவில் மிகப் பெரிய நீராவிக் கப்பல்கள், போர்க்கப்பல்களுக்கு உதவும் அளவில் அவை தேவைப்பட்டன. இத்தகைய பார அளவுக்கு அவற்றைப் பெரிதாக்குவது மட்டுமல்ல, கிட்டத்தட்டப் புது முறையில் உருவாக்குவதே இன்றியமையாததா யிருந்தது.

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குள் இயந்திர சாதனங்கள், கருவிகள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன. பனாமாத்திட்டம் இவற்றுக்குத் தூண்டுதல் தந்தது.ஆனால் இவை இல்லாமலே, ஐம்பது ஆண்டுகட்கு முன்னிருந்த குறைபட் சாதனங்களைக் கொண்டு பனாமாத் திட்டம் இவற்றுக்குத் தூண்டுதல் தந்தது. ஆனால் இவை இல்லாமலே, ஐம்பது ஆண்டுகட்கு முன்னிருந்த குறைபட்ட சாதனங்களைக்கொண்டு பனாமாத் திட்ட முதல்வர்களும், பணியாளர்களும் அத் திட்டத்தைத் திறம்பட நடத்தியுள்ளனர். சாதனங்களின் குறைபாட்டைத் திட்ட முதல்வர்களின் அறிவுத் திறமும், பணியாளர்களின் ஆர்வக் கட்டுழைப்பும் சரிசெய்து, திட்டத்தின் புகழ் வளர்த்துள்ளன.

திட்டத்தின் முதல் இரண்டாண்டுகள் இதை மெய்ப்பித்துக் காட்ட உதவுகின்றன. அந்த இரண்டாண்டுகளிலும் வெளிப் பார்வையில் உருப்படியான எந்த வேலையும் நடைபெற்றதாக எவரும் காணமுடியாது. ஆனால் பிரஞ்சுக் கழகத்தின் தோல்வியி லிருந்தது திட்ட முதல்வர்கள் சரியான படிப்பினை கற்றுக் கொண்டிருந்தனர்.வேலையின் வெற்றி உழைப்பையும் விரைவையும் மட்டும் பொறுத்தவையல்ல. தொழிலாளர்களின் உழைப்பும்