பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

375

சேவைத் துறையிலோ, கர்னல் கார்கஸும் அவர் துணைக் குழுவினரும் மக்கள் உள்ளங்கள் மீதும் கடற்கால் திட்ட நிறுவனங்களின் மீதும் தம் புகழ் மரபும் பெயர் மரபும் ஒருங்கே பொறித்துள்ளனர்.

மலையை மடுவாக்குதல், அம்மடுவை மாபெருங் கப்பல்கள் மிதந்து தவழத்தக்க கடற்காலாக்குதல், இயற்கை மலைகளிடையே இயற்கை மலையாகத் தோன்றத்தக்க வகையில் செயற்கை மலை எழுப்புதல், கப்பலுடன் கப்பல் மிதக்கும் கடலையுமே சேர்த்துப் பெட்டி தூக்குவது போல அந்தரத்தில் ஏற்றி இறக்குதல், சரியும் நிலப்பாளங்களையும், மலைகளையும் சரியாது தடுத்து நிறுத்துதல், இருப்புப்பாளங்களை மிதக்க வைத்தல், இமைக்கு முன் சந்தடியின்றிப் பாரிய இயக்கங்களை இயங்க வைத்தல் போன்ற கண்கட்டு வித்தைகளை மாயமோ ந்திரமோ இல்லாமல், அறிவுக் கண்ணால் ஆய்ந்து மனக்கண்ணினால் திட்ட உருவாக்கிச் செயற்படுத்திய அருந்திறலாளர்கள் இவர்களே யாவர்.

திட்ட நிறைவேற்றத்தின் பின்னும் இத்தகு செயல்கள் நாள் தோறும் வாரந்தோறும், ஆண்டாண்டாக, நடைபெற்றுக் கொண்டே வருகின்றன; பெருக்கமடைந்து கொண்டேவருகின்றன. அவற்றிற்கான செயலாட்சி, அமைப்பாட்சி, நில ஆட்சி, பாருளாட்சி, பொறியாட்சி, போக்குவரவாட்சி, பணியாட்சி, மன்பேராட்சி, மக்கள் நல ஆட்சி ஆகியயாவற்றையும் மணிப்பொறியின் உறுப்புக்கள் போல ஒரே வில் முறுக்கில் இயங்கச் செய்துள்ளனர் அவர்கள்.

வெப்ப மண்டலத்துக்குரிய கொள்ளை நோயினைக் கடற்காற் பகுதியிலிருந்து மட்டுமன்றி, உலகிலிருந்தே ஓட்டும் பணியில் கடற்கால் திட்டமருத்துவர் பணி, மனித இனத்திலேயே தன் புகழ் நிறுவியுள்ளது.

புதிய உலகம் என்ன செய்ய முடியும். மக்களாட்சி போர்சாரா ஆக்க வாழ்விலேயே என்ன சாதிக்க முடியும் என்பதைப் பனாமா காட்டிற்று என்பதில் ஐயமில்லை. இணையரசுத் தலைவர் ரூஸ்வெல்ட்டு மட்டுமல்ல, எழுகடலுலகே இதைக்கண்டு வியந்து பாராட்டுகின்றது!