பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

377

கடற்காலில் எங்கும் காணப்படும் நடைமுறை ஒழுங்கும்

வாய்ப்பு நலங்களும் உலகில் வேறெங்கும் எளிதில் காணமுடியாதவை. கப்பல்கள் துறைமுகத்தை அணுகுவதற்கு 48 மணி நேரம் முன்பாகவே துறைமுக வரவேற்பரங்கத்தார் ஒலிபரப்பு மூலம் தொடர்பு கொண்டு யாவும் திட்டம் செய்து விடுகின்றனர். கற்கால் வழிகாட்டி கப்பலை எதிர் நோக்கிச் செல்கிறார். பல்போவாத் துறைமுகம் அணுகுமுன்பே கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து, கரைவரை ஓர் அணைகரை யிடப்பட்டுள்ளது. கடற்காலிலிருந்து வெட்டிய மண்ணும் பாறையுமிட்டு அது கடலடைத்து அமைக்கப்பட்டுள்ளது. கப்பலை எதிர் கொண்டு வரவேற்கச் செல்லும் வழிகாட்டிக்குப் பயன்படத்தக்க முறையில் இது அமைந்துள்ளது.

காண்பவரையும் கேட்பவரையும் வியப்பூட்டி ஆர்வம் பிணிக்கவல்ல கடற்காலின் உறுப்புக்கள் கால்லியர்டுப் பிளவு, கேதன் ஏா, கேதன் அணை, மட்டங்களை இணைக்கும் பூட்டுக்கள், பாரோ கொலராடோத் துவு,மாடன் அணைக்கட்டு ஆகியவையே. இவற்றுள் கடற்கால் வரலாற்றிலேயே பேரிடம் வகித்துள்ள பகுதி கால்லியர்டுப் பிளவேயாகும்.

பனாமா கடற்கால் விளக்கம்

1.

கோலன் நகரம்

2.

கிரிஸ்டோபெல் துறைமுகம்

3.

வானவில் நகரம்

4.

மார்கரிதா நகரம்

5.

கேதன் பூட்டுக்கள்

6.

கேதன் அணை

7.

கேதன் ஏரிப்பகுதி

8.

கம்போவா நகரம்

9.

சாக்ரிஸ் ஆறு

10.

கால்லியல்டுப் பிளவு