பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(378

அப்பாத்துரையம் - 10

11.

12.

தங்கக் குன்று

13.

14.

குத்தகைக்காரர் குன்று

பெட்ரோ மிகவெல் பூட்டுக்கள்

மிராப்ளோர்ஸ் ஏரி

15.

மிராப்ளோர்ப் பூட்டுக்கள்

16.

தியாப்ளோ மேடு

17.

18.

அங்கன் குன்று

19.

பல்போவாத் துறைமுகம்

கோட்டைத் தீவுகள்

கப்பல்கள் கால்லியர்டுப் பிளவுப் பகுதியில் செல்லும் போது, அதில் உள்ளவர்களுக்கு ஓர் ஆழ்கிடங்கில் செல்வது போன்ற தோற்றமே மிகுதியா யிருக்கும். கட்டுமான காலத்தில் கடற்காலை அதில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 'கிடங்கு' என்றே பழக்க உரிமையுடன் அழைத்தனர். இது மலைகுடைந்து உருவாக்கிய பகுதி என்பதை இருதிசைக் காட்சி களும் தெள்ளெனத் தெளியக் காட்டு கின்றன. இருபக்கத்திலு முள்ள மலைகள் பாறைகளும் காண்பவரை மலைக்க வைப்பவை.

இவற்றுள் தங்கக் குன்று என்பது செங்குத்தாக 660 அடி உயர்ந்து வானோக்கி நிமிர்ந்து நிற்கின்றது. ‘குத்தகைக்காரர் குன்றம்" (Contractors' Hill) என்பது முன்பு 410 அடி உயரமாயிருந்தது. அதன் பாறைகள் அடிக்கடி கடற்கால்மீது சாய்ந்து இடரும் இடரச்சமும் விளைவித்தமை கருதி, அதன் முகடும் சரிவுகளும் பெரிதும் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன.