பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

381

காடாயிருந்த நீரடியிலும் வாழ்ந்த செடி கொடி உயிர்கள், விலங்கு, பறவைகள், பூச்சியினங்கள் ஆகியவை இங்கே அடைக் கலம் பெற்றன. தீவையும், தீவில் இவற்றின் தொகுப்பால் அமைந்த காட்சி மனையையும் ஆய்வுக் கூடத்தையும் 'ஸ்மித்ஸோனியக் கழகம்' என்ற ஆராய்ச்சி நிலையம் ஆட்சி செய்கிறது.

கேதன் அணை இப்போது கடற்காலமைப்பின் உயிர்த் திறவாகக் கருதப்படுகிறது. ஆயினும் கட்டுமான காலங்களில் அது அமெரிக்க மன்றங்களிலும், பத்திரிகைகளிலும் பெருத்த ஆதரவு எதிர்ப்புக்களுக்கு ஆளாகியிருந்தது. அந்நாளைய சிறந்த பொறிவ லாளர்களில் மிகப் பலர் அதன் வலுவிலும் உறுதியிலும் பெருத்த அவநம்பிக்கை கொண்டிருந்தனர்.

தில்

இரண்டு இயற்கைக் குன்றுகளிடையே சாக்ரிஸ் ஆற்றுக்குக் குறுக்காக ந்த கட்டப்பட்டுள்ளது. இ அணை இணைந்துள்ள 230 இலட்சம் குழிக்கோல் மண்ணும் பாறையும் இயற்கைக் குன்றுகளுடன் முற்றிலும் இணைந்து ஒன்றுபடுத்தப் பட்டுள்ளது. அது செயற்க்ைக கட்டுமானம் என்பதை ஒருவரும் எளிதில் காண முடியாதவாறு வேலைப் பாடும் இணைப்பும் திறம்பட இயற்றப் பட்டுள்ளன.

இவ்வணை ஒன்றரைக் கல் நீளமும் அடித்தளத்தில் அரைக்கல் அகலமும் உடையது. இதனடியிலுள்ள நீர் செல்பாதை1200 அடி நீளம் 285 அடி அகலமுடையது. மதகுகள் ஒவ்வொன்றும் 45 அடி அகலமுடையதாக, 14 மதகுகள் உள்ளன. 14உம் திறக்கப்பட்டால் ஒரு நொடிக்கு 150 ஆயிரம் குழி அடி நீர் அவற்றின் வழி வடியும். இவ்வளவு நீர் சாக்ரிஸ் ஆற்றில் என்றும் வடிந்ததில்லை.ஆகவே துருவெடுப்பு வேலையின்போது மட்டுமே 14 மதகுகளும் திறக்கப் பெறுகின்றன. வெள்ளக்கட்டுப் பாட்டுக்காகப் பொதுவான 8க்கு மேற்பட்ட மதகுகள் திறக்கப்படுவதில்லை.

கேதன் ஏரி கடல் மட்டத்தைவிட மிகவும் உயர்ந்ததாதலால், பனாமாக் கடற்காலின் பூட்டுக்களின் ஏற்ற இறக்கத்துக்கு நீர் இறைக்கவோ, அதற்கான இயந்திர ஆற்றல் செலவு செய்யவோ தேவை ஏற்படவில்லை. இயல்பான நீரோட்டத்தின் மூலம் அது நடைபெறுகிறது. ஆனால் ஒவ்வொரு தடவை கப்பல் செல்லும் போதும் 520 இலட்சம் காலன் நீர் கடலுக்குச் செல்கிறது.