பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

385

கட்கும் இலக்கான பகுதியாகும். கால்வாய் ஆட்சியின் மருத்துவ அரங்கப்பணி கொள்ளை நோய்களின் மூலதனமாயிருந்த இப்பகுதி யிலிருந்து அத் தொல்லைகளை ஓட்டியுள்ளது.

திட்டத்தொடக்கத்தில் வேலை நிறைவேற்றத்துக்குக் குறிக்கப் பட்ட நாள் 1915 ஜனவரி முதல் நாளாகும். ஆனால் நிலச் சரிவுகள் போன்ற எதிர்பாரா இடர்கள் குறுக்கிட்டபின்னும் திட்ட நாளுக்குப் பல மாதங்கள் முற்பட்டு 1914 ஆகஸ்டு 15 ளேலயே முழுதும் முடிவுற்று, கடற்காலின் திறப்புவிழா இனிது நடைபெற்றது.

திறப்புவிழா அன்று பனாமா இருப்புப் பாதைக்குரிய கப்பல் ‘ஆங்கன்' கடற்காலின் வழியாக முதற் பயணம் சென்றது. அது முதல் ஆண்டுதோறும் பல நாடுகளுக்குரிய கொடிகளுடன் உலகெங்கு முள்ள வாணிகக் கப்பல்களும், பயணக் கப்பல்களும், போர்க் கப்பல்களும் அதன் வழி சென்று பெரும் பயனடைந்து வருகின்றன.

கடற்காற் பணிக்கான செலவு தொடக்க மதிப்பீடு கடந்து மொத்தம் 38 கோடி வெள்ளியாகியுள்ளது.

கடற்காலின் ஆட்சிமுறை 1914 வரை ஸ்பூனர்ச் சட்டத்தின் படி அமெரிக்க அரசியல் மேற்பார்வையில் இருந்தது. அவ்வாண்டு பனாமக் கடற்காற் கழகம் என்ற தனி அமைப்பிடம் அது ஒப்படைக் கப்பட்டிருந்தது. பனாமா இருப்புப் பாதைக் கழகம் அதனுடன் ஒத்துழைத்தது. ஆனால் 1951 ஜூலை 1 இல் பனாமா இருப்புப் பாதைக் கழகம் கடற்காலின் செயலாட்சிக் கழகமாக்கப்பட்டு அமெரிக்க இணையரசிடம் தொடர்பு கொண்ட ஒரு தனியாட்சிக் கழகமாயிற்று. அதே சமயம் கடற்காற் பகுதிக்கு ஒரு நிலவரை ஆட்சியும் (Zone Government) அமைக்கப்பட்டது. செயலாட்சிக் கழகத் தலைவரே நிலவரை ஆட்சியின் ஆட்சி முதல்வராக அமைந்தனால் இரண்டும் தனித்தனியாக, ஆனால் நோக்கத்தில் இணைந்து செயலாற்ற முடிகிறது.

கடற்காலின் எல்லாச் செலவுகளுக்கும் ஈடு செலுத்தும் முறையில் அதன் சுங்க வரிவிகிதம் அமையவேண்டுமென்று சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நில ஆட்சியின் செலவை