7. பொங்கு மாவளம்
மக்கள், மக்களுக்காக, மக்கள் மூலமாக ஆளும் ஆட்சியே குடியாட்சி! குடியாட்சி பற்றிய அரசியலறிஞரின் விளக்கம் இது. ஓருலக அரங்கத்தில் இதற்கிணையாக ஒரு மேற்கோள் வாசகம் காணலாம். உலகம், உலகத்துக்காக, உலக வரலாறு முழுவதையுமே தளமாகக் கொண்டு வகுக்கும் செயலே ஓருலகச் செயல்.சூயஸ், பனாமாத் திட்டங்கள் இரண்டுமே இத்தகைய உலகச் செயல்கள், ஓருலகச் சாதனைகளாகும். அவை மனித இன வாழ்வில் வளமூட்டி, மனித இன வரலாற்றின் உள்ளீடாக ஒளிரும் பொன்னிழைகளாகும்.
உலகில் இவ்விரு சாதனைகளும் விளைவித்துள்ள மாறுதல்கள் எண்ணற்றவை.மனித வாழ்வில் அவை ஊக்கியுள்ள, ஊக்கிவரும் ஆக்கவளமும் மிகப் பெரிது. அதோடு, உலக வாழ்வின் ஒவ்வொரு துறையிலுமே அவை புகுந்து புதிய ஆற்றும் புத்தாக்கமும் அளித்து வருகின்றன. உலகை ஓருலக வாழ்வாக ஒன்றுபடுத்தி அவை மனித இன வாழ்வை ஊழி கடந்து ழியாகப் பொங்கு மாவள நோக்கி இடையறாது இட்டுச் சென்று கொண்டே இருக்கின்றன.
தள
இரு திட்டங்களிலும் ஒற்றுமைகள் மிகப்பல, வியக்கத்தக்க முறையில் பல. ஆயினும் வேற்றுமைகளும் சில உண்டு கால இட வரலாற்றுப் பின்னணிச் சூழல்களின் விளைவுகளாக அமைபவை அவை. இந்த ஒற்றுமை வேற்றுமைகளில் ஒருங்கே கருத்துச் செலுத்தினால்தான், வருங்கால வாழ்வில் அவற்றுக்குரிய தனித்தனி முக்கியத்துவமும் விளங்கும்.
இரண்டும் தோற்றம், வளர்ச்சி, வளம் ஆகிய மூவகையிலும் உலகச் செயல்கள், ஓருலகச் சாதனைகள் உலக நோக்குடன் உலக முழுமைக்கும் வேறுபாடின்றிச் சேவைசெய்பவை. இரண்டும்