பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரு கடற்கால்கள்

391

ரு

இரண்டும் ஒரே ஓருலக உயிர் மண்டலத்தின் இரு பாதிகளின் மையங்கள், தமிழகம் அம்மையங்களின் இணைப்பு

என்னலாம்.

பனாமா, ஜிப்ரால்ட்டர், சூயஸ், ஏடன், தமிழகக் கடலிடுக்கு, சிங்கப்பூர் - உலக நடுவூடாகச் செல்லும் உயிர் மண்டலத்தின் கணு மையங்கள் இவை.

வரலாற்றில் இயல்பாக மனித இன நாகரிகம் வளர்த்த உயிர் மண்டலம், கடல்வழி மரபையும் நாகரிகத்தையும் உலகெலாம் பரப்பிய இனங்களின் தாயகங்களை இணைக்கும் நாகரிக மண்டலம் இதுவே. நில வழியிலும் கடல் வழியிலும் வான் வழி.0யிலும் உலகின் இயல்பான மைய மண்டலமும், கதிரவனை நோக்கியவாறே நிலவுலகம் சுற்றும் கதிர்வழி மண்டலமும் இதுவே. கடல்வழி செல்பவர் இம்மண்டலத்தினூடாகச் செல்லாமல் தடுத்து வந்த இருநில இடுக்குகள் சூயஸ், பனாமா ஆகியவையே - இயற்கை யுணர்வால் உந்தப்பட்டு, ஓருலகக் கனவால் இயக்கப்பட்டு மனிதன் இவ்விரு தடைகளையும்அகற்றிக் கடல் வழியிலேயும் இவ்வுயிர் மண்டலத்தைத் தங்கு தடையற்ற போக்குவரவுக் குரியதாக்கியுள்ளான்.

க்கடலிணைப்புக்கள் மூலம் பண்டை நாளில் கடல் வழி நாகரிகம் வளர்த்த இனத் தாயகங்கள் மீண்டும் உலகின் கடல் வழி மையங்கள் ஆகி வருகின்றன. அந் நாகரிகங்களுள் ஒன்றாய், அவற்றின் உயிர்மையமாய், அவற்றுள் மூவா இளநலமடைய முதல் நிலமாய் விளங்கும் தமிழகத்துக்கும் உலகுக்கும் மீண்டும் புது மலர்ச்சி ஏற்படும் என்பதற்கு இது ஒரு முன் அறிகுறி யாகும்.

தமிழகக் கடலிடுக்கு இராமாயணக் கனவுடன் தொடர் புடையது. அதனை நினைவூட்டும் வகையில் அதனை ஆழ்கடற் கலங்குகளுக்குரிய வழியாக்குவதற் கான இன்றைய கனவுத் திட்டம் ‘சேது மாகடல் திட்டம்' என்று குறிக்கப்படுகிறது. உயிர் மண்டலத்தின் உயிர் மையத்துககுரிய இவ்வெதிர் காலத் திட்டம் சூயஸ் இணைப்புக்கும் பனாமா இணைப்புக்கும் இணை மையமாவதுடன், உயிர் மண்டலத்துக்கும் புத்துயிர் ஊட்டும் என்னலாம்.

நாகரிக உலகின் நடுக்கடல் நடவுலகக் கடலானால், அதன் நடு மாகடல் இந்து மாகடல் என்று இன்று அழைக்கப்படும் குமரி