பக்கம்:அப்பாத்துரையம் 10.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

அப்பாத்துரையம் - 10

மொழியுரிமை தந்தது. இத்துடன் 1848-இல் பத்திரக்காரர் கோரிய முனைப்பு மிக்க சீர்திருத்தங்கள் அனைத்துமே பெரும்பாலும் வழங்கப்பட்டுவிட்டன என்று கூறலாம்.

இன்று பிரிட்டிஷ் அரசியல் மன்றின் பொது அவைகிட்டத் தட்ட 600 உறுப்பினர்களை யுடைய பேரவையாகும். அதில் 30 பேர் வெல்ஸ் நாட்டுப் பெயராட்கள்; 72 ஸ்காட்லாந்தின் பெயராட்கள். அயர்லாந்து உட்பட்டிருந்தபோது அதன் சார்பில் 103 உறுப்பினர் இருந்தனர். பெருமக்கள் அவையிலும் 620 உறுப்பினர் உண்டு. அதில் அரச குடும்பத்துக் கோமக்கள் இளவரசிகள்(Dukes Duchesses) கோமான்கள்(Marquesses) இளங்கோக்கள்(Earls Viscounts) பெருமக்கள்(Barons) வழக்கு மன்றத் தலைவரான நிறை வாழ்நாட் பெருமக்கள்(டுகைந யீநநசள) தலைமக்கள்(Bishops) ஆகியவர் இருப்பர். தலைமக்கள் மூன்றாம் எட்வர்டு காலத்தில் மிகுதி. ஆனால், தலைப் பெருமக்கள் இருவர்(Archbishops of youth and canterbury) நீங்கலாக இப்போது 24 தலைமக்களே இடம் பெற்றுள்ளனர்.

தொடக்கத்தில் அரசருடன் ஒப்பாயிருந்த பெருமக்கள் வலிமை பெற்றிருந்தனர். பெருமக்கள் அவையும் அரசருடன் வீற்றிருந்து தீர்ப்பளிக்கும் முதற் பெரு மன்றமாயிருந்தது. இன்றும் முடிவான மேல்வழக்குகள் அதன் பெயராலோ அதன் கிளைக்குழு மன்றங்களாலோ தான் நடைபெற்று வருகின்றன. பொதுஅவை அரசு வீற்றிருந்து ஆணை செய்யும் அரசன் முன்னும் பெருமக்கள் முன்னும் நின்று கொண்டு மன்றாடும் அவையாகவே தொடங்கிற்று. இன்றும் அரசர் முடியேற்பு முதலிய தறுவாய்களில் வெளிச்சடங்கு முறையில் இப்பழக்கம் தொடர்ந்து வழங்குகிறது. ஆனால், மன்னர் செலவுக்குப் பணந்தரும் உரிமை காரணமாகப் படிப்படியாய்ப் பொதுஅவை வலிவு பெற்று மேம்பட்டது. மன்னர் செயலாற்றுங் குழுவாக ஏற்பட்ட அமைச்சரவையைப் பொது அவை தேர்ந்தெடுத்து அவர்களை இயக்கியதன் காரணமாய் படிப்படியாகப் பொதுஅவையே உண்மையில் ஆட்சி புரியும் அரசாங்கத்தின் தலைமை அவையாகவும், சட்ட அவையாகவும் முழுமுதல் முறை மன்றமாகவும்-சுருங்கச் சொன்னால் உண்மை அரசியல் மன்றமாகவும் விளங்குகிறது.