பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 அப்பாத்துரையம் 11

நூற்றாண்டுக்கு முன் இருந்த புத்தசமண இலக்கியங்களையும் மக்கட் பழங்கதைகளையும் முதலில் சைவ, வைணவச் சார்பாகவும் பின் புதிய சுமார்த்த அல்லது பிராமண சமயச் சார்பாகவும் திரித்துப் புராண இதிகாசங்களாக்கினர். புத்த சமண மதங்கள் நலிவுற்றபின் இவையே பழைய இலக்கியங்களாக நடமாடின.

சோழர் பேரரசாட்சியுடன் தென்னாடும் கீழ்நாடும் ஒரு புதிய ஊழியில் புகுந்தனவாதலால் அதன் வரலாற்றை அடுத்த பிரிவில் ஆராய்வோம்.