பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 அப்பாத்துரையம் 11

சட்ட'மே உலகக் கடல்களில் திராவிடருக்கு இருந்துவந்த இந்த வானுயர் செல்வாக்குக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

திராவிடர் வரலாற்றிலும், தமிழிலக்கிய முழுவதிலுமே தென்னவரின் இக்கடலோடிப் பண்புக்குச் சான்றுகள் எராளமாகக் காணலாம்.

கப்பல் தொழிலைப்போலவே மற்றப் பல்வேறு வகைக் கைத்தொழில்களிலும்-உழவு, நெசவு, பட்டுத் தொழில், சுரங்கத்தொழில், முத்து, மணி, பொன் வெள்ளி சார்ந்த கலைத்தொழில்கள் முதலிய எல்லாத் தொழில்களிலும் திராவிடமே உலகின் மையத் தொழிற்களமாய், உலகின் செய்பொருள் மூலதளமாய் இருந்தது. வெள்ளையர் முதலில் 16-17-ஆம் நூற்றாண்டுகளில் இவற்றைத் தம் அரசியல் ஆதிக்கத்தாலும், அதனை அடுத்து 18-19-ஆம் நூற்றாண்டுகளில் தமக்குப் புதிதாகக் கிடைத்த இயந்திர சாதனத்தாலும் அழித்த திராவிடத்தின் இத்தொழில் தலைமையும் வாணிகத் தலைமையும் அதன்மீது அரசியலாதிக்கம் செலுத்திய பிரிட்டனுக்குக் கை மாறின. இதனைக் கார்ல்மார்க்ஸ் தம் உலக வரலாற்று விளக்கத்தில் எடுத்துக் காட்டியுள்ளார்.

இவ்வெல்லா வகைகளிலும் திராவிட நாட்டுக்கும், அதன் இனமரபுக்கும், நாகரிகத்துக்கும் நேர்மாறான இயல்புடையது திராவிடம் நீங்கிய பாரதத்தின் வடதிசை உருவிலாப் பரப்பு. திராவிடர் பண்டைக் கடலோடி இனங்களில் முதல் இனமாவர்; ஆரியரோ உலகின் பண்படா நாடோடி இனமாய் வாழ்வு தொடங்கி இன்றுவரை கருத்திலும் கனவிலும்கூட அது கடந்து சிந்தனை செலுத்தாதவராய் உள்ளனர். தண்ணீரைக் கண்டால் வாலைக் கால்களுக்கிடையில் சுருட்டிப் பதுங்க வைத்துக்கொண்டு பின்னேறும் 'நாட்டு நாய்' போன்றவர்களாகவே அவர்கள் இன்றும் உள்ளர்.

தொல்காப்பிய காலத்திலிருந்து தமிழருக்குரிய 'முந்நீர் வழக்கம்' அதாவது கடல் வாணிக மரபினை, ஆரியர்களும் அவர்கள் இலக்கியமும் அறியா. அவர்களின் சுமிருதி ஏடுகள் இதை திராவிடருக்குரிய தகாவழக்கம், ஆரியர் மேற்கொள்ளக்கூடாத பெரும் பழி என்று இதனைக் கண்டித்தன. திராவிடர்