பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 |– – அப்பாத்துரையம் 11

இனவேறுபாடு கடந்த, சமயங்கடந்த, சமய வேறுபாடு கடந்த ஒரு கடவுட் படைப்பான ஒருலகம் என்றே அவர்கள் கருதினர். உலகெலாம் இன்புற்றிருக்கக் கனவு கண்ட' இந்தத் தமிழகத்துக்குத்தான் இன்று ஓருலகில் இடம் வேண்டாம் என்கின்றனர் ஒருலகப் பண்பும், ஒருகுலப் பண்பும் அற்ற 'குலநீதி' உத்தமர்கள்!

ஓருலக அரசு அணிமைக்காலக் கனவு. ஆனால் இன்று அது நாட்டடிப்படையிலே, இன அடிப்படையிலே, தேசிய அடிப்படையிலேமட்டுமே அமைந்து வருகிறது. அப்படித்தான் அமையமுடியும். ஏனெனில் அது சர்வதேசிய ஓருலகம். இதுமட்டுமன்று. இன்னும் ஒருலக அமைப்பு விடுதலையடையாத, தன்-னுரிமையற்ற தேசிய இனங்களுக்குப் பிரதிநிதித்துவம் தரவில்லை. விடுதலை அடையாத நாடுகளின் பிரதி நிதித்துவம் வழங்குவதில் அவற்றின் தேசிய வாழ்வைத் தன் அகன்ற வயிற்றுக்குரிய சொந்த உடைமையாகக் கருதும் ஏகாதிபத்தியங்களே தடையாய் இருக்கின்றன. இந்நிலையில் விடுதலைபெற்ற பர்மாவும் இலங்கையும் இடம்பெற்றதுபோல, திராவிடம் இடம்பெறாமல் பாரத ஏகாதிபத்தியம்தான் தடுத்து வருகிறது. ஓருலகக் கனவு கண்ட, ஓருலகப் பண்புமிக்க, ஓருலகத்தைப் படைத்துருவாக்கும் ஆற்றல்மிக்க திராவிடத்துக்குத்தான் அந்த ஓருலகில் இடமில்லாமல் பாரத ஏகாதிபத்தியம் தடுத்து வருகிறது. மற்ற ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு திராவிடநாடு போன்ற தனி இனங்களின் உரிமைகளை ஏப்பமிடப் பாரத பக்தர்கள் படபடக்கின்றனர்.

தமிழன் ஓருலகை விரும்புகிறான்; ஆர்வமாக விரும்புகிறான். ஆனால் அவன் விரும்பும் ஓருலகில் அவனுக்கு இடம் வேண்டும். அவன் உரிமைக்கும் அவன் இனத்துக்கும் மற்ற இனங்களுடன் ஒத்த, மற்றத் தேசியங்களுடன் ஒத்த சமஉரிமை வேண்டும். தமிழனுக்கு, தமிழினமாகிய திராவிட இனத்துக்கு, திராவிடத்தைப்போலவே ஏகாதிபத்திய இனங்களின் காலடியில் பட்டுத் துவளும் பல தேசிய இனங்களுக்கு உரிமையில்லாமல் இருக்கும்போது ஓருலகம் என்று பேசுவது ஏகாதிபத்தியங்களின் திமிர் பிடித்த ஆணவப் பித்தலாட்டமே தவிர வேறில்லை.

தமிழன், திராவிடன் உரிமையில்லாது ஓருலகம் உண்மையில் அமையமுடியாது. நீடித்து உலக மக்களுக்கு நலந்தந்து வளர