பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14. வேற்றுமை யறிவு ஒற்றுமை


'உலகமெல்லாம் ஒன்றாக ஆகிவரும்போது ஏனப்பா நீ பிரிவினை முழக்கம் செய்கிறாய்?' என்று பாரத போலித் தேசிய பக்தர்கள் திராவிட உயிர்த் தேசிய இயக்கத்தாரிடம் கேட்கிறார்களல்லவா? அதற்குத் திராவிட இயக்கத்தார் வேறு விரிவான விளக்கம் எதுவும் கூறத் தேவையில்லை. பிரிவினை என்ற ஒரு சொல்லுக்குப் பதில் வேற்றுமை என்ற சொல்லைப் போட்டு அதே கேள்வியை அவர்களிடம் திருப்பிக் கேட்டுவிட்டால் போதும். ஏனெனில் அந்தக் கேள்வி கேட்க வேண்டியவர்கள் பாரத பக்தர்களல்ல, திராவிட தேசிய இயக்கத்தார்களே. அக்கேள்வி கேட்கப்பட வேண்டியவர்கள் திராவிட தேசிய இயக்கத்தவர் அல்ல, பாரத போலித் தேசிய வாதிகளே.


"உலகமெல்லாம் ஒன்றாக, ஓரினமாக ஆகிவரும்போது, ஏனப்பா நீ மட்டும் இனவேற்றுமை முழக்கம் செய்கிறாய் ?' என்று திராவிடர் பாரத பக்தரைக் கேட்டால் அவர்கள் கதிகலங்குவர், திணறுவர். அது அவர்கள் உண்மைச் சொரூபத்தை உலகுக்குக் காட்டி விடும்! ஏனெனில் ஆரியருக்கு ஒரு நீதி, ஆரியரல்லாதவர்க்கு ஒரு நீதி-இதுவே அவர்கள் பாரத தேசியத்தின் பழம் பெருமை வாய்ந்த நீதி-சமஸ்கிருத இலக்கியங்கள், பகவத்கீதை, சாத்திரங்கள் போற்றும் நீதி!

பாரத பக்தர்கள் பாரதியின் பாட்டைக் காட்டி ஒற்றுமைக்கீதம் பாடுகிறார்கள். பிரிவினை ஒற்றுமைக்கு எதிரான பண்பு என்று வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் ஒற்றுமைக்கு எதிரிடையான பண்பு பிரிவினையல்ல, வேற்றுமை! பிரிவினை ஒருமைக்கே எதிரானது. இதனை அவர்கள் சொல் புரட்டு மறைத்துக் காட்டுகிறது. ஒற்றுமைக்குப் பாடுபடும் இனம் திராவிட இனம்-ஊரிலும் சரி, சமுதாயத்திலும் சரி, நாட்டிலும்