பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

183

வைதிகர்கள் என்று கருதப்படுவதுபோல, உலகை வெறுத்தவர்கள் தாம் உத்தம முனிவர்கள் என்று நம்பப்படுவதுபோல, ஏகாதிபத்திய வாதிகள் தாம் தேசியவாதிகள் என்ற நாமத்தைத் தமதாக்கிக் கொண்டு, தேசியவாதிகள் மட்டுமே தேசத் துரோகிகள் என்று தூற்றப்படுகிறார்கள். திராவிட இனத்தவர் மட்டுமல்ல, மராத்திய இனத்தவரும் பஞ்சாபிய இனத்தவரும், அசாமிய நாக இனத்தவரும் இந்த உண்மையைக் காணத் துவங்கியுள்ளார்கள்! மெள்ள ‘உள் நாட்டு ஏகாதிபத்தியம்' என்ற மந்திரத்தை அவர்கள் உச்சரிக்கத் தொடங்கிவிட்டார்கள்!

திராவிட நாட்டுச் சுதந்தரம் என்று திராவிடர் கூறாமல், திராவிட நாட்டுப் பிரிவினை என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணமான சூழலே ஏகாதிபத்தியச் சூழல்தான். 'தேசியத்தி லிருந்து பிரிவினை' என்று பொருள்படும்படி அது என்றும் வழங்கியதில்லை. ஏகாதிபத்தியத்திலிருந்து பிரியும் சுதந்தர தேசியத்தையே அது குறிக்கிறது. ஒருவகையில் பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்திலிருந்து இந்தியா பிரிந்த பிரிவினை போன்றதுதான் அது. ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிந்தது ஒரு தேசியமல்ல, ஒரு ஏகாதிபத்தியம். பெரிய ஏகாதிபத்தியத் திலிருந்து பிரிந்த சிறிய ஏகாதிபத்தியமாகவே, சுதந்தரம் என்று தவறாக அழைக்கப்படும் இந்தியப் பிரிவினை அமைந்தது.பெரிய ஏகாதிபத்தியம் அதை ஒரு ஏகாதிபத்தியப் பிரிவினையாக்காமல், இந்தியக் கூட்டுறவு ஏகாதிபத்தியப் பிரிவினை, பாகிஸ்தான் ஏகாதிபத்தியப் பிரிவினை என்று இரண்டு ஏகாதிபத்தியப் பிரிவினைகள் ஆக்க முடிந்ததன் காரணம் இதுவே. ஆனால், இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து திராவிடம் ஒரு ஏகாதிபத்திய மாகப் பிரியப் போவதில்லை. ஒரு தேசியமாகவே பிரிய இருக்கிறது. ஆயினும் இப்புண்ணிய பூமியின் புண்ணிய மொழிகளில் ஏகாதிபத்தியப் பிரிவினைக்குத் தேசிய சுதந்தரம் என்ற பெயர் தரப்பட்டது. தேசியப் பிரிவினையை மட்டுமே, சுதந்திரம் என்று வழங்காமல் பிரிவினை என்று வழங்கித் தூற்ற எண்ணுகிறார்கள். ஆனால், கூர்ந்து நோக்கினால், பிரிவினை என்ற சொல் ஏகாதிபத்தியவாதிகள் கண்ணையே குத்திக் காட்டும் சொல் ஆகும். சுதந்தரத்தைப் பிரிவினையாகவும் ஏகாதிபத்தியத்தை ஒற்றுமையாகவும் கருதுபவர்கள் இந்திய ஏகாதிபத்தியத் 'தேசிய'வாதிகள்.