பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

ஒரு

185

'பிரிவினை' என்ற சொல் வழங்கப்படுவதன் முழு உட்பொருள் இதுமட்டுமன்று; பிரிந்தபின் திராவிடம் உலகின் பழம் பெருந்தேசியத்தின் புத்துயிர் உருவாகக் காட்சியளிக்கும். ஆனால், பிரிந்தபின் கூடப் பாரதம் ஒரு தேசியமாக, புதுப் பெருந் தேசியமாகக் கூடக் காட்சியளிக்காது. அது அப்போதும் ஒரு புதிய சிறிய ஏகாதிபத்தியப் பரப்பாகவே இருக்கும். அத்துடன் பிரிவினைக்குப்பின் திராவிடம் முன் ஆண்ட இனமாதலால், மறுபடியும் ஆட்சித் திறமையுடன், உலகில் செல்வ வளமும் புகழும் நாட்டி, வருங்கால உலகில் சீரிய ஒரு நடுநாயகப் பங்குகொண்டு மேம்பட்டு விளங்கும். ஆனால், பிரிந்த பின்னும் பாரதம் அவ்வாறு விளங்குதலரிது. ஏனெனில் அது என்றும் தன்னைத்தான் ஆண்டு பழகாத இனக் கதம்பம். வரலாறும் பாரதக் கூட்டரசே வெளியிட்டுள்ள இனவாரி நிலப்படமும் இதனைக் காட்டும்.

-

-

-

கிழக்கே வங்காளிகள் திராவிட மங்கோலியக் கலப் பினத்தவர். அசாமியர் பண்படாத் திராவிடர் அதாவது நாகர் மங்கோலியக் கலப்பினத்தவர். மேற்கே மராத்தியர், குஜராத்தியர் திராவிட- சிதிய இனக் கலப்பினத்தவர். விந்தியப் பகுதி பண்படாத் திராவிட மங்கோலிய ஆரியக் கலப்பினத்தவர். இமயப் பகுதி ஆரிய - திராவிடக் கலப்பும், சிந்து காசுமீரப் பகுதி ஆரிய சித்தியக் கலப்பும் உடையது. மொழித் துறையிலோ கிழக்கும் தெற்கும் மேம்பட, வடக்கும் மேற்கும் படிப்படியாகத் தேய்வுற்று வரும் அழிவுநிலையுடையவை என்றும் ஆளாத இந்தக் கதம்ப இன ஏகாதிபத்தியம் திராவிடம்போலத் தனித் தனி தேசிய இனங்களாகி, திராவிட நாகரிகத்தையும் பண்பாட்டையும் பின்பற்றிச் சமத்துவப் பண்பும் குடியாட்சிப் பண்பும் பெற்றாலன்றி, உலகில் தேசியமோ சர்வதேசியமோ பேணும் ஓர் உறுப்பாக இடம்பெற முடியாது. செல்வ நிலையிலோ, வடதிசையின் ஏகாதிபத்தியப் பரப்பு இன்று தென்னகத்தைச் சுரண்டி வாழும் வழியன்றி மற்றெவ்வகையிலும் வளங்காணும் முயற்சியேயில்லாதது. அதன் வறுமையை மாற்ற இன்றுபோல இனியும் நெடுநாள் ஆசிய இனங்களைச் சுரண்டி வாழ எண்ண முடியாது.திராவிடப் பண்பு பேணினாலன்றி அது புதிய தேசியங்கள் வகுத்துப் புதுவளம் காண முடியாது.