பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




186

அப்பாத்துரையம் - 11

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, ஆண்ட இனமாகிய பிரிட்டிஷாரிடமிருந்து பாகிஸ்தானைப் போல, பர்மாவைப் போல, இலங்கையைப் போலத் திராவிடமும் நேராகப் போராடிப் பிரிந்திருந்தால், அந்த அரசியல் புரட்சியை நாம் பிரிவினை என்றே கூறியிருக்க மாட்டோம். சுதந்தரம், விடுதலை, தன்னுரிமை என்றே கூறியிருப்போம். இப்போது தனியுரிமை கேட்பது ஆண்ட இனத்தவரிடமிருந்தல்ல, ஆண்ட இனத்தவரை வெளியேற்றி விட்டு, அந்த ஆண்ட இனத்தவர் பிரியவிட்டது போக மீந்த பரப்பை யெல்லாம், பிரிக்காது மீத்துத் தந்த பரப்பையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு ஆள எண்ணுகிற, ஒரு தேசிய இனக் கதம்ப ஏகாதிபத்தியத்தினிடமிருந்தே - ஆளத் தெரியாத, ஆண்ட அனுபவமோ, தகுதியோ, ஆளுபவர்க்குரிய நேர்மை உணர்வோ இல்லாத ஓர் ஏகாதிபத்தியத்தினிடமிருந்து வென்று ஆளாது வெல்லாமலே மற்றோர் ஏகாதிபத்தியத்தின் தயவால் கிடைத்ததை அதன் தத்துப் பிள்ளையாக, கங்காணியாக ஆளவந்திருக்கிற கோழை ஏகாதிபத்தியத்தினிடமிருந்து கோரப்படும் தன்னுரிமையாதலால்தான், திராவிடராகிய நாம் இத் தனியுரிமையை இன்னும் பிரிவினை என்று கூறுகிறோம்.