பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(190) ||- ||--

அப்பாத்துரையம் 11

என்பது குறிப்பிடத்தக்கது. அதே அடிப்படையில்தான் பாகிஸ்தானில் சேராத காஷ்மீரும் ஏகாதிபத்தியத்தின் நேர் வாரிசான தம்முடைய ஆட்சிக்கே உரிமையாக வேண்டுமென்று வாதாடி அதற்காக நம் பணத்தையும் இறைத்து, நம் மக்களுயிரை யும் பெரிதும் பலி கொடுத்துள்ளனர். உண்மையில், பிரிட்டிஷார் நேபாளத்தையும் பூட்டாணத்தையும், திபெத்தையும் இந்து சீனாவையும், சீனத்தையும் வென்றிருந்தால், அனைவரும் இந்திய ஏகாதிபத்தியத்தின் கூறுகளாகவே ஆகியிருக்கக் கூடும். ஏகாதிபத்தியத்தின் கூறுகளாகவே அசாமையும் தம் கைக்குள் வைத்துக் கசக்க எண்ணும் தில்லி ஏகாதிபத்தியவாதிகள் அவற்றையும் விடாப்பிடியாகத் தம் தேசப் பகுதிகள் என்று இன்று கூறி வந்திருப்பர், வருவர் என்பதில் ஐயமில்லை.

இன்றைய இந்திய ஏகாதிபத்தியத்தின் துரதிருஷ்டம், பிரிட்டிஷார் படைவலிமை சீனாவரை சென்று எட்டவில்லை. இல்லையென்றால் பிரிட்டிஷாரின் நேர்வாரிசான நேரு பண்டிதரின் ஏகாதிபத்தியக் கொடி திபெத்திலுள்ள கைலாசத்திலும் பறந்திருக்கும்! பாரத மக்கள் வணங்கும் பரமேசுவரன் வாழும் மலையும், அவருக்குரிய தாழ்வடக்காய் தரும் மரம், விசிறியாம் வெண்சாமரம் தரும் கவரிமான் ஆகியவற்றைச் செல்வமாகக் கொண்ட நாடும் பாரத மக்களுக்கே உரியவை என்றுகூடப் பாரதம் பண்பாடியிருக்க வழியுண்டு! இது மட்டுமோ? அக்கொடி காவிரிக் கரையில் மட்டுமல்ல, யாங்ட்ஸி ஆற்றுக்கரையிலும், மினாங், மீகாங் ஆற்றுக்கரைகளிலும் கூடப் பறந்திருக்கக் கூடும்.

நேபாளம், பூட்டாணம், ஆப்கானிஸ்தானம் ஆகியவற்றின் நல்ல காலம், அவை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் வெல்லப் படாததனால் அவ்வாறு வெல்லப்பட்ட இந்திய ஏகாதிபத்தியத்தின் பிடியுட்பட்டுத் தம் சுதந்தரத்தை இழந்து விடவில்லை. அதுபோலவே, ஏடன், இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் ஆகியவற்றின் நல்ல காலம், அவை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிவுற்று அந்த அறிவுடைய ஏகாதிபத்தியத்திலிருந்தே சுதந்தரம் பெறும் பேறு பெற்று விட்டன. மூன்றாவதாகப் பாகிஸ்தானின் நல்ல காலம் பிரிட்டன் இந்திய ஏகாதிபத்தியத்திலிருந்து பிரிந்து செல்லும்