பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(194)

அப்பாத்துரையம் 11

இன்றைய திராவிடத்தில் முதலமைச்சர் காமராசரும் அமைச்சர் சுப்பிரமணியமும், முன்னாள் காங்கிரஸில் மெளலானா ஆசாதும் காங்கிரஸுக்கும் திராவிட, முஸ்லிம் விபீஷணர்களாயிருந்து வந்துள்ளது போல, பர்மாவுக்குக்கூட அன்று பங்கி உத்தமர் போன்ற விபீஷணர்கள் காங்கிரஸ் ஆதரவாளராக இல்லாமலில்லை.

ஆனால், தேசியங்களின் சார்பில் கூட்டுத் தேசிய அமைப்பாகப் பிரிட்டனை எதிர்ப்பதில்தான் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்ததே தவிர, தேசிய இனங்களின் சுதந்தரப் போராட்ட எதிர்ப்புக்கு முன் அது என்றும் வெற்றி கண்டதில்லை, காணவும் முடியாது. ஏனெனில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் போதுதான் காங்கிரஸ் இயக்கம் விடுதலை இயக்கமாகச் செய லாற்ற முடியும். தேசிய இனங்களை எதிர்க்கும்போது, அதுவும் ஏகாதிபத்தியமாய், தன் சொந்த உருவான ஏகாதிபத்திய வடிவம் பெற்று, உலகில் ஏகாதிபத்தியங்கள் அடைந்த, அடைய இருக்கிற கதியையே தானும் அடைய நேருகிறது. திராவிட தேசியத்தின் முன்னும் அது இதே வகையான தோல்வியைக் கண்டே தீரும்!

பர்மாப் பிரிவினையை இப்போது யாரும் நினைப்பதில்லை. 'பிரிட்டிஷார் பிரித்த பிரிவினைதான் பர்மாப் பிரிவினை; ஆகவே பர்மா ஒரு தனி நாடன்று' என்று எந்த இந்திய ஏகாதிபத்தியவாதியும் இன்று கூற முடியாது; கூற மாட்டார். ஆனால், பாகிஸ்தான் வகையில் அவ்வாறு கூறினர். நாட்டைக் கூறு போடுவதா, தாயைச் சிதைப்பதா என்றெல்லாம் கூக்குரலிட்டுக் கதறினர்; கேலிப் படம் போட்டனர்.ஏகாதிபத்திய வடவர் மட்டுமல்ல, அவர்களின் தமிழகக் கூலிகள்கூடச் சிலேடை நயம்பட, சின்னா அவர்கள் செய்ய எண்ணும் 'சின்னாபின்னம்' பார் என்று படம் போட்டுப் பத்திரிகைக் கட்டுரைகள், நூல்கள் எழுதி எழுதிக் குவித்தனர். உலகப் பெரியார் காந்தியடிகள் முதற்கொண்டு, இஸ்லாமிய உலகப் பேரறிஞரான அபுல்கலாம் ஆஸாத் என்ன, பின்னாளில் பட்டாணிஸ்தான் கோரிய எல்லைப்புறக் காந்தி கபார்கான் என்ன- இத்தனை பேரும் சேர்ந்து எதிர்த்தார்கள். ஆனால், இந்திய ஏகாதிபத்தியம் ஒரு சிறு பூசலிட்டுப் பர்மிய தேசியத்தின் முன் தோற்றுவிட்டதுபோலவே, சிறிது பெருங் கூச்சலிட்டு