பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

||--

அப்பாத்துரையம் - 11

ஆரிய திராவிட வேற்றுமை பாராட்டக்கூடாது என்ற சீரிய எண்ணம் கொண்டவர்களுள் முன்னணி முன் வரிசையில் இருந் தவர் காந்தியடிகள். முன் வரிசையில் இருப்பவர் பண்டித ஜவஹர்லால் நேரு. ஆனால், இருவரும் இருவேறு வகைகளில் ஆண்டான் அடிமை ஒற்றுமையையே ஆரிய திராவிட ஒற்றுமையாகக் கண்டனர்.

இறுதிக்காலத் தொழுகைக் கூட்டமொன்றில் திராவிட

நாட்டுக் கோரிக்கைபற்றிக் காந்தியடிகளார் குறிப்பிட நேர்ந்தது. 'தென்னாட்டிலுள்ள திராவிட மொழிகள் - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் - மிகப் பழமையான பேரிலக்கியம் உடையவை என்று கேள்விப்படுகிறேன். ஆனால், சமஸ்கிருதச் சொல் தொகுதியைப் பேரளவில் கொண்டுதானே - சமஸ்கிருத ருத இலக்கியத்தைப் பேரளவில் அணைத்துத்தானே அவை இத்தகைய வளங்கண்டுள்ளன?' என்று அவர் கேட்டார்.

ஆரியர் சார்ந்தே ஆரிய திராவிட ஒற்றுமை காண முடியும், காண வேண்டும்-காந்தியடிகளின் அருளார்ந்த சமரசக் கற்பனை கூட இதற்குமேல் இன ஒற்றுமையை உருவாக்கிக் காணமுடிய வில்லை. சமஸ்கிருத எழுத்து முறை விலக்கி, சமஸ்கிருதச் சொற்கள் என்று ஐயுறப்படும் சொற்களைக்கூட விலக்கித் தனித்து இன்றும் இயங்கி, இனியும் இயங்க இருக்கும் தமிழ் மொழி பற்றிக் காந்தியடிகள் கேள்விப்படவில்லை என்பது தெளிவு. கேள்விப்பட்டால் என்ன கூறியிருப்பாரோ, அறியோம். அத்துடன் சமஸ்கிருதத்துக்கு இலக்கிய இலக்கணம் ஏற்படுமுன்னரே, எழுத்து உருவாகும் முன்னரே, எழுத்து முறையும் இலக்கண இலக்கிய வளமும் வாய்ந்த சிறந்த மொழி தமிழ் என்பதும் காந்தியடிகள்வரை சென்று எட்டாத ஒரு செய்தி ஆகும். பாரத தேசியம் - பல தமிழ்த் தலைவர்களைக் கொண்ட பாரத தேசியம் - அத் தமிழ்த் தலைவர்கள் உழைப்பை மட்டும் ஏற்று, அவர்கள் பெயர் மறந்த தேசியம் செய்த, செய்து வரும் இருட்டடிப்பு இது!

ம்

காந்தியடிகளாரைவிட முனைப்பாக, காந்தியடிகளாரின் வாரிசாகிய பண்டித ஜவஹர்லால் நேரு ஆரிய திராவிட வேற்று மை உணர்ந்தவர். ‘மீட்டும் கண்டுபிடிக்கப்பட்ட இந்தியா' என்ற