பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

199

அவர் சிறைக் காவியத்தில், ஆரியர் வருகைக்கு முன்பே நிலவியிருந்த, ஆரிய நாகரிகந்தாண்டிய சீர்சான்ற சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கிட்டத்தட்ட கவிதை மொழியில் சிந்து பாடுகிறார். ஆரியர் வருகையால், இந்திய நாகரிகம் சிறிது தடைப்பட்டு, சிறிது தளர்வுற்றதன்றி, வேறெவ்வகையிலும் தொடர்ச்சியறாது. இன்று வரை நிலவுகின்றது என்றும், இன்றைய இந்திய நாகரிகத்தின் வேர்முதல் அதுவே என்றும் அவர் விளக்கி மகிழ்கின்றார். அத்துடன் 'நாத்திகம்' என்ற பகுதியில், இன்றைய இருபதாம் நூற்றாண்டைய மேலை உலகுகூட வியப்பார்வத்துடன் காணத்தகும் உயர் முற்போக்குக் கோட்பாடுகளையுடைய உயர் பண்பாட்டியக்கம் இந்தியாவில் எங்கும் வேதகாலத்துக்கு முன்பே பரவியிருந்தது; அது மூட நம்பிக்கையற்ற பகுத்தறிவொளி கண்டு சமுதாயச் சமத்துவம், சமயச் சார்பற்ற அறிவிலக்கியம் கண்டிருந்தது என்று பெருமைப் படுகிறார். ஆனால், இப்பெருநாகரிகத்தின் பெரும் பண்பாட்டின் - நிலைக்களமான திராவிட நாகரிகத்தைப் பெயர் சுட்டிக் குறிப் பிடக்கூட அவர் அறிவார்ந்த ஆரியக் குருதி இடம் தரவில்லை.

-

-

இந்தியா என்ற பெயர் 'இந்து' அதாவது நிலவை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது என்று அவர்தம் புதல்விக்கு வரையும் கடிதத்தில் குறிக்கிறார். விந்தியத்துக்கு வடக்கேயுள்ள பாரதம் - சிந்து கங்கை சமவெளி 'இந்து' போல, பிறைபோல வளைந்து கிடப்பதாலேயே அப் பெயர் பெற்றது என்றும் அவர் கூறத் தயங்கவில்லை. இராமாயணம் தென்னாட்டில் ஆரியர் பரவிய செய்தியைக் குறிப்பதென்றும் அவர் ஒளிவு மறைவின்றி ஏற்றுக் கொள்கிறார். இவை சரியா, தப்பா என்ற ஆராய்ச்சியன்று, இங்கே கவனிக்கத்தக்கது. ஆரிய திராவிட வேற்றுமைகளை நன்கறிந்த பின்னும் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் இச் சீரிய பட்டதாரி, தாம் ஆரியர் என்பதையும் மறந்துவிடவில்லை. நம் பாரத தேசியம் ஆரிய தேசியமே என்பதையும் வற்புறுத்தத் தயங்கவில்லை. அந்த ஆரிய தேசியத்தில் திராவிடருக்குரிய இடம், ஆரிய ஆட்சியை ஏற்றமைந்து, அதற்கு அடிவருடி வாழ்வதே என்பதை இந்த ஆசிய சோதி ஒப்புக்கொள்ள முடிகிறது.