பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

201

வேட்டைக் காடாக்கும் ஒற்றுமையன்று. அது எல்லா இனங்களையும் சரிசம உரிமையுடையவையாக மதித்து, எல்லா இனங்களுக்கும் தத்தம் தன்னுரிமை, தன்னாட்சியுரிமை தந்து, அன்பு அடிப்படையிலே, நேச உறவடிப்படையிலே ஒற்றுமையை உண்டுபண்ண விழைகிறது. இந்த அடிப்படையில்தான் யவனர் என்ற பண்டைக் கிரேக்க, உரோம நாட்டினருடனும் சீனருடனும் அராபியருடனும் (தமிழர்) தொடர்பு கொண்டிருந் தனர். அதே அடிப்படையில் தான் பாரதப் பரப்பிலோ கீழ்திசையிலோ, வேறு எந்தப் பரப்பிலோ இல்லாத அளவில் தமிழகத்தில் மட்டும் வந்தவர்களுக்கு ஆதரவும், இன உரிமையும் பண்பாட்டுரிமையும், மொழி உரிமையும் தங்குதடையின்றி வழங்கப்பட்டு வந்துள்ளது, வருகிறது.

இன்று