பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20. பிராமண இளைஞர் முன்வருவரா?

தமிழகத்தில் வந்த அயலினத்தாரில் மிக மிகப் பழமையா னவர்தாம் ‘ஆரியர்' என்று அடிக்கடி தம்மைக் குறித்துக் கொள்ளும் கவிஞர் பாரதியினத்தவரான பிராமணர்கள். இவர்களில் இருநூறு ஆண்டுகட்கு முன் வந்தவரும் உண்டு. இரண்டாயிர ஆண்டுகட்கு முன் சங்க காலத்திலே தமிழகத்துக்கு விருந்தினராக வந்து, பட்டயங்களுடனும் தனிச் சிறப்புரிமை களுடனும் தமிழரசரால் போற்றப் பட்டவர்களும் உண்டு. வடவர், பிரகசரணத்தார், எண்ணாயிரவர், அறுவேலிகள் (ஆறாயிரத்தார்) முதலிய பெயர்கள் இன்னும் அவர்கள் தனி வருகைச் சின்னங்களாக இயல்கின்றன. இவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதற்கு உண்மையில் அவர்கள் பெயர்களையும் வரலாற்று ஆதாரங்களையும் தவிர வேறு தெளிவு காண்டல் அரிது. அந்த அளவுக்கு மற்ற அயலினங்கள் கூடப் பெறாத தனிச் சிறப்புரிமையும் சமுதாய, சமய அரசியல் வாழ்வில் பங்கும் அவர்கட்குத் தொடக்கத்திலிருந்தே தரப்பட்டிருந்தன.

தாழ்ந்த தமிழகத்தில், பிரிவுற்றுத் தேய்ந்த தென்னகத்தில் கூட அவர்கள் நிலை, வாழ்வோங்கிய வடதிசையிலுள்ள அவர்கள் முன்னோர், இன்றைய உறவினர் நிலையைவிட எவ்வளவோ மேம்பட்டது. அவர்கட்குத் தமிழகத்திலும் தென்னகத்திலும் இருக்குமளவு வாழ்க்கை வசதி, கல்வி வசதி, மக்கள் ஆதரவு ஆகியவை அவர்களுடைய வடதிசை உறவினர்களுக்கும் கிடையாது. தமிழ் வணிகர்களு செல்வர்களும், தென்னக அரசர்களும் ஒருவரை ஒருவர் எவ்வளவு எதிர்த்தழித்தாலும், தம் குடிகளை எவ்வளவு துயரப்படுத்தித் தவிக்கவிட்டாலும், ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுச் சமஸ்கிருதப்பள்ளி, கல்லூரிகள், வேதபாட சாலைகள், அறநிலையங்கள், கோயில் திருப்பணிபேரால் மானியங்கள்

ம்