பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதுதான் திராவிட நாடு

207

ஆகியவற்றுக்கு நாட்டின் செல்வ முழுதும் வாரி வழங்கினர். பிரிட்டிஷ் ஆட்சியிலும் இந்நிலையே நீடித்துள்ளது. வடதிசை தராத வாய்ப்பு வளங்களைத் தென்திசை அவர்கட்குத் தந்ததனாலேயே, இன்று கல்வியிலும் அறிவிலும், திறமையிலும் ஆற்றலிலும் வடதிசைப் பிராமணரைவிடத் தென்திசைப் பிராமணரும் தலை சிறந்து விளங்குகின்றனர். அனைத்திந்தியப் பணிமனைகளிலே, எல்லாத் தாய்மொழி நிலங்களிலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழகப் பிராமணர்களையே மிகமிகப் பெருவாரியாக இன்று காண்கிறோம். அவர்கள் இல்லையானால் இன்று பாரத ஆட்சியில்லை, நாகரிகமில்லை, கலை இல்லை. அவர்கள் இல்லையானால் சமஸ்கிருதத்தின் பெருமை, ஆரிய நாகரிகத்தின் பெருமை பாதிக்குமேல் குன்றிவிடும்.

மற்ற அயலினத்தவர்களெல்லாம் தம் தாய்மொழி, பழக்க வழக்கங்கள், சமய முறைகளைக் கொண்டே வந்தனர். பலர் இன்னும் அவற்றைப் பேணியே வருகின்றனர். ஆனால், ஆரியர் எனப்படும் பிராமணர் தம் தாய்மொழியைக் கொண்டு வந்தனரோ, இல்லையோ இன்று புகுந்த நாட்டுத் தாய்

மொழியன்றி அவர்கட்கு வேறு எதுவும் மொழி மரபு கிடையாது. பழக்க வழக்கங்களிலும் அவர்கள் தம் அயற்பழமை பேணியுள்ளனர் என்று கூறமுடியாது. அவர்கள் தமிழர் கோயில்களையும் வழிபாட்டு முறைகளையும் சமயத்தையும் தமதாக்கிக் கொண்டு அவற்றில் ஆதிக்கமே வகிக்கின்றனர். தம் பழைய வேள்வி முறைகளை, மந்திர தந்திரங்களைப் பெரிதும் மறந்து கை நெகிழ விட்டுள்ளனர். அதுமட்டுமோ? அவர்கள் வடதிசை முன்னோரையும் உறவினரையும்கூடத் தம் தென்திசை ஆதிக்கத்தால் மாற்றி, தென் திசைப் பண்பை இமயம்வரை ஓரளவு பரப்பியும் விட்டனர். அத்துடன் தம் வடதிசை உறவினர் உண்ணும் மீனையும் கைவிட்டு, தமிழகச் சமய உயர் வகுப்பினருடன் இடம் பெற்று, அத் தமிழகச் சமய உயர் வகுப்பினருடன் இடம் பெற்று, அத் தமிழகப் பண்பாட்டைக் கூர்ச்சரம், அலகாபாதுவரை பரப்பியும் வருகின்றனர். அவர்கள் வடதிசை உறவினர் அணிந்துவந்த, அணியும் இரட்டைக் குழல் பைகளை (பாய்ஜாமாக்களை) மெல்லப் பாளைத்தாராக்கி இப்போது பழமைச் சின்னமாக ஒதுக்கி வருகின்றனர். அவர்கள் முன்னோரும் அவர்கள் வழிவந்த இன்றைய வடதிசை உறவினரும்